Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET - ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.


இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த வி.தமிழரசன் தாக்கல் செய்த மனுநான் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்று, பி.எட். முடித்து 2013-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 92 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றேன்இந்நிலையில் 2014-இல் பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை எண். 71-இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற தகுதி 7 ஆண்டுகள் தான் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுதற்போது நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. 2018 வரை ஆசிரியர் பணி கிடைக்கவில்லை.

இன்னும் 2 ஆண்டுகளில் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்காவிட்டால் நான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றது செல்லாமல்போய்விடும்இதற்கிடையே கடந்த ஜூலை 2-இல் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை எண்.149-இல், இனிவரும் காலங்களில்ஆசிரியர் பணி நியமனம் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறாது. அதற்குப் பதிலாக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத்தான் ஆசிரியர் பணி வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளதுஎனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற்றிருந்தாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்ற அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு முறை தகுதி பெற்றால் 7 ஆண்டுகள் தான் செல்லுபடியாகும் என்ற நிலையை மாற்றி ஆயுள்காலம் முழுவதும் செல்லுபடியாகும் என உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்ததுமனுவை விசாரித்த நீதிபதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

21 comments

 1. கோர்ட்டுக்கே Exam வெச்சாலும் வெப்பாங்க இவங்க.... அம்மாடியோவ்

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. 2013 TET cv mudinchu 5% relaxation koduthadhunala thana ivlo prachana.2013 tet la jobla irukuravangalukum intha 2exam porunthumnu tn govt solli veliyetra mudiuma.nan 2012 tet la 89 and 2013 tet la 105 weightage kularupadila no job

  ReplyDelete
 4. Replies
  1. Thambi... peyare theriyatha nee...enkala padikka solluriya...??? Naanum paathukitte irukken psycho maathiri ivan maathi maathi pesuran makkale... ivana konjam paathu deal pannunka

   Delete
  2. ippo kovam varutha... Naankalum unknown name la varuvom

   Delete
  3. ippo kovam varutha... Naankalum unknown name la varuvom

   Delete
 5. Enna padingalaa,,, erkkanave padichu pass pannavangalukku posting pottu kilichupputtaaha!!!!

  ReplyDelete
 6. prms a velai podamattanga no need argument tet illa dead itha pesitae 6 years poitu

  ReplyDelete
 7. super jeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

  ReplyDelete
 8. 2013 la first 90 mark than pass by verification mudichom. Athukapuram 82 nu mathunanga. 2014 la joined Panna ellarum vanthu second exam elutha sollunga nammalum eluthalam avangaluku mattum posting namaku exams exam vena 2017 Ku vaikattum

  ReplyDelete
  Replies
  1. ஏன் 2017 ல் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு மட்டுமே அடுத்த தேர்வு என்றால் உங்களுக்கு தேர்வு எழுத யோக்கியதை இல்லையா. அப்படி இருந்தால் தான் 2017ல் எங்களை போல் மதிப்பெண்ணை உயர்த்தி கொள்ள முடிந்து இருக்கும். சும்மா ஒரு முறை பாஸ் ஆகிவிட்டு ஆயுசு வரைக்கும் இப்படியே நொண்டி சாக்கு போக்கு சொல்லி கொண்டே இருக்க வேண்டியது தான்

   Delete
 9. 👍👌தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழன் தானும் வாழான் பிறரையும் வாழ விடான் என்ன ஒரு பெருமையான விஷயம்

  ReplyDelete
 10. வழக்கு தொடர்ந்தவர் உடனே திரும்பபெறவேண்டாம் இல்லையெனில் உங்கள் சான்றிதழ் காலாவதியாகிவிடம் , எனவே உடனே நாளைக்கே திரும்பப்பெற்ற செய்தி கல்விச்செய்தியில் வரவேண்டும் அப்படி செய்தால் அனைவருக்கும் நல்லது

  ReplyDelete
 11. competitive exam is the best method

  ReplyDelete
 12. Thalaiva nee poitiya. Nanga tet pass pani nadu rotula irukom. Engaluku yaru irukanga.kalainjar ayya

  ReplyDelete
 13. Dear sir what happened vandemadaram judgement pls who known tell mw

  ReplyDelete
 14. Date aug 29 achu but case results kanom

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives