TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ராமதாஸ் அறிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2018

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ராமதாஸ் அறிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் எழுதிய இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன்30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில்200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.விரிவுரையாளர் பணிக்கான தேர்வுகளில் சில மாணவர்களின் மதிப்பெண்களைப் பட்டியலிடும் போது, கூடுதலாக சில மதிப்பெண்களை சேர்த்துப் பதிவு செய்ததன் மூலம் அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத்தாள்களை கணினியில் உள்ளீடு செய்து கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமான பணி என்பது மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தான். இந்தப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் இந்தப் பணி எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை.ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கூட, அந்தப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் தேர்வு மதிப்பெண் முறைகேடுகள் நிச்சயமாக நடந்திருக்காது. ஆனால், அவ்வாறு செய்யப்படாததை எதேச்சையாக நடந்த, சாதாரண விஷயமாகக் கருதமுடியாது.

தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதைய தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில் தான் நடந்து கொண்டனர்.

ஆனால், இவர்களைத் தாண்டிஇந்த ஊழலுக்கு ஆட்சியாளர்கள் நிலையிலோ, அதிகாரிகள் நிலையிலோ யாரோ துணை போயிருக்க வேண்டும். இந்த ஊழல்களுக்கு முகவர்களாக செயல்பட்ட சிலரையும், கடைநிலை ஊழியர்கள் சிலரையும் கைது செய்து விட்டு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டித்து விட்டோம் என ஆட்சியாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தமாகும். இது குற்றவாளிகளை ஊக்குவிக்கும்.அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 இந்த அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும்அவசியமாகும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

12 comments:

  1. PG TRB 2017ல் நடைப்பெற்ற தேர்வில் தமிழ் பாடத்தில் 200 பேர் 75 மதிப்பெண் எடுத்துள்ளார் இவர்கள் அனைவரின் OMR சரி பார்த்தால் இதிலும் உண்மை வெளிவரும்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. அப்போ 2013 டெட் போஸ்டிங் மட்டும் எப்படி நியாயமா நடந்திருக்கும் ? அப்போதான் அதிகமா போஸ்டிங் போட்டாங்க.

    உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தமிழக அரசு கைது மற்றும் தகுதி / பணி நீக்கம் செய்யவேண்டும்..

    கல்வித்துறை மீதான களங்கம் வெளிப்படையாக தீர்க்கபட வேண்டும்

    ஊழலை மறைப்பதால் பாதிக்கப்படப்போவது மாணவர்களே .

    ReplyDelete
  4. Nitchayam visaaranai thevai.TET yaal nirayapear valkkai mattum naasamaa pogavillai sila uyirkalum poivittana.

    ReplyDelete
  5. TET-2017 தேர்வானவர்களில் ஒருவருக்கு கூட இன்று வரை அரசு பள்ளியில் வேலை வழங்க வில்லை. PG-TRB
    ஊழல் நடந்தது ஆனால் TET-2017 என்று மடைமாற்றம் செய்கிறார்கள். PG TRB Written Examination July 2, 2017. Certificate Verification August 28 and 29, 2017. உடனடியாக வேலையும் வழங்கப்பட்டது. 7th Pay commission ஊதிய யுயர்வும் வழங்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 30 - 2017 TET-2017 இல் தேர்வு எழுதிய யாருக்கும் இப்பொழுது வரை ஒரு அரசு பணியும் வழங்கப்படவில்லை. PG-TRB 30 லட்சம் அது தான் இவ்வளவு வேகமாக வேலை பார்த்தார்கள் அம்மாவில் வழியில் ஆட்சி

    ReplyDelete
  6. trp special teachers exam resuliyum maru madepeedu seiya vendum.innum pala unmiykal velivarum.

    ReplyDelete
  7. 2017 tet cancelled pannunga... thevidiya passanga irukaravai urupadathu tamilagam..

    ReplyDelete
  8. Kasatapatu padithavargal yarum 2017tet cancelled pana sola matanga unmai vellum wait and see

    ReplyDelete
  9. Epdi cancelled pannavanga nermaiya pass pannavanga enga poranthu.

    ReplyDelete
  10. Kurukku valila pass pannavanga venumna cancelled pannunga

    ReplyDelete
  11. 2012(1st tet) லேயே (இதற்கு முன்பும் இருக்கலாம்) ஊழல் மூலம் posting பண்ணிய trb தேவி... பசங்க இப்போது மட்டும் சும்மா விடுவானுகளா... மூடிக்கொண்டு போங்கடா பொட்ட பசங்களா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி