TRB - சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2018

TRB - சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

தேர்வு வாரியம் மூலம் தேர்வாகும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட இருக்கிற சிறப் பாசிரியர்களுக்கு ஆசிரியர் தின மான செப்டம்பர் 5-ம் தேதி பணி நியமன ஆணை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்உறுதியளித் துள்ளார். தமிழகத்தில் இதுவரையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்று வந்த தையல், ஓவியம், உடற் கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பணிநியமனம் தற்போது முதல் முறையாக ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் போட்டித்தேர்வு மூலமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.

 அந்த வகையில், அரசு பள்ளி களில்1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். எழுத்துத்தேர்வு முடிவுகள் ஜூலை 27-ம் தேதி வெளியிடப் பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,846 பேர் தகுதிபெற்றனர். அவர் களுக்கு கடந்த 13-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் சான்றி தழ் சரிபார்ப்பு நடந்தது. அப் போது கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைசரிபார்க் கப்பட்டு வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கு ஏற்ப உரிய மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன. உரிய கல்வித்தகுதி இல்லாமல்விண்ணப்பித்தவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்துகொண்ட சுமார் 200 தேர்வர்கள் சனிக்கிழமை கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையனை அவரது இல்லத் தில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். சிறப்பாசிரியர் தேர் வுப் பட்டியலை விரைவாகவெளி யிட வேண்டும் என்றும் நடப்பு கல்வி ஆண்டு வரையிலான காலி யிடங்களை சேர்த்து கூடுதல் சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஓவிய ஆசிரியர் தமயேந்தி வரைந்தஅமைச்சர் செங்கோட்டையனின் உருவப்படத்தை அவருக்கு நினை வுப்பரிசாக வழங்கிய தேர்வர்கள், கேரள வெள்ள நிவாரண நிதி யாக ரூ.31 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினர்.

அமைச்சரை சந்தித்து வந்த தேர்வர்கள் கூறுகையில், சிறப் பாசிரியர் தேர்வுப்பட்டியல் தயாரிப் புப் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடை பெற்று வருவதாகவும், தேர்வுபட்டி யலை விரைந்து வெளியிட்டு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி அன்று பணிநியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச் சர் உறுதியளித்ததாகவும் தெரிவித் தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக்கால அட்ட வணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளி யிடப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக் கான அறிவிப்பு வெளியிட்டு ஓராண் டுக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

15 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. TET எழுதுன நாங்க மட்டும் என்னடா பாவம் ஏன்டா எங்க வாழ்க்கையில விளையாடுற....

    ReplyDelete
  3. தேர்வு பெற்றவர்கள் வேலையில் சேர்ந்து அவர்கள் வாழ்க்கை சிறந்த முறையில் அமைய என்னுடைய இதயம் பூர்வ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Posting pottutu pinnadiyea tet mains syllabus vantha nalla irukkum.....

    ReplyDelete
  5. SALEM COACHING CENTRE சார்பாக 2.8.2018 அன்று நடைபெற உள்ள TET PAPER 1 & 2 மற்றும் GROUP 2 மாதிரி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும் .முன்பதிவு அவசியம்.

    SALEM COACHING CENTRE
    VOC NAGAR,
    SURAMANGLAM,
    SALEM - 636 005

    PH : 9488908009; 8144760402

    https://www.facebook.com/Salem-Coaching-Centre-184345275685896/

    ReplyDelete
  6. Never believe in Mr.Senkottaiyan's words.

    ReplyDelete
  7. tet la pass anavangalukum ihay mathiri seniority marks follow pannalamay then nxt level exam syllabus enna .theriyama mental aeiduvoom pola

    ReplyDelete
  8. No nxt exam tet pass+seniority la job podungaa.tamilnadula piranthathu kuttrama illa b.ed padithathu kutrama ..kadavulayyy yaarmay illaiya intha kodumaiya thirkkaaa

    ReplyDelete
  9. cordiyally advance congrats..😀

    ReplyDelete
  10. TGT. SGT க்கு டெட் பாஸ் பண்ணியவர்களின் வாழ்க்கையை தொலைத்து விட்டான் தே.. பய.

    ReplyDelete
  11. கல்வி அமைச்சர் அவர்களுக்கு கணினி ஆசிரியர்களை நியமிக்கும் எண்ணம் உள்ளதா.. ஏழை மாணவர்களுக்கு கணினி அறிவினை வழங்க விருப்பம் இல்லை போலும்...

    ReplyDelete
  12. Special teacher kavathu illuthadikamal posting pota nallathu.

    ReplyDelete
  13. நீங்களாவது நல்லா இருங்க ஃபிரண்ட்ஸ்... வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி