Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

உலக வரலாற்றில் இன்று ( 07.09.2018 )


செப்டம்பர் 7 (September 7) கிரிகோரியன் ஆண்டின் 250 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 251 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 115 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

70 – ரோமப் பேரரசின் இராணுவம் தளபதி டைட்டஸ் தலைமையில் ஜெருசலேமைக் கைப்பற்றியது.
878 – லூயி, திக்குவாயர் (லூயி தி ஸ்தாமரர்) மேற்கு பிரான்சியாவின் அரசனாக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூட்டப்பட்டார்.
1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1191 – சலாகுத்தீனை இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அற்சுப்பில் நிகழ்ந்த சண்டையில் தோற்கடித்தார்.
1228 – புனித ரோமப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.
1539 – குரு அங்காட் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார்.
1812 – நெப்போலியன் ரஷ்யாவின் முதலாம் அலெக்சாண்டரின் படைகளை பரடீனோ என்ற கிராமத்தில் தோற்கடித்தான்.
1821 – வெனிசுவேலா, கொலம்பியா, பனாமா மற்றும் எக்குவாடோர் ஆகியவற்றை உள்ளடக்கிய கிரான் கொலம்பியாக் குடியரசு உருவானது. சிமோன் பொலிவார் இதன் தலைவர் ஆனார்.
1822 – பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1860 – லேடி எல்ஜின் நீராவிக்கப்பல் மிச்சிகன் வாவியில் மூழ்கியதில் 400 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியாவின் அட்லாண்டா நகரில் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1929 – பின்லாந்தில் “குரு” என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் 300 தொன் கனவெடிகுண்டுகளையும், 13,000 எரிகுண்டுகளையும் வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.
1942 – உக்ரேனில் 8,700 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
1943 – டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய 55 பேர் கொல்லப்பட்டனர்.
1950 – ஸ்கொட்லாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். 116 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1953 – நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.
1965 – இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.
1977 – பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.
1978 – கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ விமானம் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.
1978 – பல்கேரிய அதிருப்தியாளர் கியோர்கி மார்க்கொவ் லண்டன் வாட்டர்லூ பாலத்தைக் கடக்கையில் பல்கேரிய இரகசிய காவற்படையினன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1986 – தென்னாபிரிக்காவின் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.
1986 – சிலியின் அதிபர் ஆகுஸ்டோ பினொச்செ கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார்.
1988 – ஆப்கானிஸ்தானின் முதலாவது விண்வெளி வீரர் அப்துல் அஹாட் மொஹ்மண்ட் சோவியத்தின் சோயூஸ் விண்கலத்தில் பூமி திரும்பினார்.
1998 – கூகிள் ஆரம்பிக்கப்பட்டது.
1999 – ஏதன்சில் இடம்பெற்ற 5.9 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 143 பேர் கொல்லப்பட்டனர்.
  1999 – இலங்கை இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் செம்மணியில் கொல்லப்பட்ட 600 இற்கும் மேற்பட்ட தமிழர்களின் புதைகுழி விபரம் தெரியவந்தது.
2004 – சூறாவளி ஐவன் கிரனாடாவைத் தாக்கியதில் 39 பேர் கொல்லப்பட்டு 90 விழுக்காடு கட்டிடங்கள் சேதமாயின.

பிறப்புகள்

1533 – முதலாவது எலிசபெத், இங்கிலாந்தின் அரசி, (இ. 1603)
1913 – அப்துல் காதர் லெப்பை, இலங்கை கவிஞர் (இ. 1984)
1929 – ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
1953 – மம்முட்டி, மலையாள ந்டிகர்
1984 – பர்வீஸ் மவுரூவ், இலங்கையின் துடுப்பாளர்
1984 – மாலிங்க பண்டார, இலங்கையின் துடுப்பாளர்

இறப்புகள்

1949 – எல்ரன் மாயோ, ஆஸ்திரேலிய உளவியலாளர் (பி. 1880)
1997 – மொபுட்டு செசெ செக்கோ, சயீரின் குடியரசுத் தலைவர் (பி. 1930)
2014 – சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)

சிறப்பு நாள்

பிரேசில் – விடுதலை நாள் (1822)
மொசாம்பிக் – வெற்றி நாள்

1 comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives