10 - 15 சதவீத பாடத் திட்டம் குறைகிறது - அமைச்சர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2018

10 - 15 சதவீத பாடத் திட்டம் குறைகிறது - அமைச்சர் அறிவிப்பு


''அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கு, 10 - 15 சதவீத பாடத் திட்டங்கள்குறைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்து உள்ளார்.

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் மற்றும் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் பாடதிட்டத்தை பின்பற்றும் பள்ளிகளின் பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கைஎடுக்கப்போவதாக, மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பள்ளிகளில், 1 முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என, ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. எனவே, பாடதிட்டத்தை மறு சீரமைப்பு செய்து, அதன் சுமையை, 10 - 15 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம், அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும். அதற்கு அடுத்த கல்வியாண்டில், பாடத் திட்டம், மேலும் குறைக்கப்படும். இந்த மறுசீரமைப்பு பணிகளை, என்.சி.இ.ஆர்.டி., செய்து வருகிறது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி