10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2018

10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு


'சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடக்கும்; அடுத்த வாரம், தேர்வு தேதி வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஏப்ரலில் நடத்துவதற்கு பதில், மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை, இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.தற்போதைய நிலையில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 240 பாடங்களுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது.

 இதில், திறன் மேம்பாடுதொடர்பான தொழிற்கல்வியில், 10ம் வகுப்பில், 15 பாடங்களும்; பிளஸ் 2வில், 40 பாடங்களும் நடத்தப்படுகின்றன.மேலும், டைப்போகிராபி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், வெப் அப்ளிகேஷன், கிராபிக்ஸ் மற்றும் ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற பாடங்களில், மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் படிக்கின்றனர். இந்த பாடங்களுக்கும், தொழிற்கல்வி பாடங்களுக்கும், பிப்., மூன்றாம் வாரத்தில், தேர்வுகள் துவங்கும். மற்ற முக்கிய பாடங்களுக்கு, ஏப்ரலுக்கு பதில், மார்ச்சிலேயே தேர்வுகள் துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி