10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகளை மூட அரசு கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2018

10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகளை மூட அரசு கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்!



தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க,பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.

 இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன.500 ,பள்ளிகளை, இழுத்து, மூடுது ,அரசுமத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்குகுறைந்த பட்சம், 30 மாணவர்கள்என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

இதன்படி கணக்கிட்டதில், 826 பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,053 பள்ளிகளில், மிக குறைவாக உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.மாணவர் குறைந்த, 1,053 பள்ளிகளையும், தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என,மத்திய அரசுக்கு, தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதுஇயங்கும் பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகள் மூடப்படும் என, தெரிய வந்துள்ளது.

3 comments:

  1. இன்று அரசு பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தது போல மக்கள் ஒருநாள் இந்த அரசு எந்திரத்தின் மீதும் நம்பிக்கை இழப்பார்கள்

    ReplyDelete
  2. Teachers enna than pandranga private school la vedu vidu Poi canvass pandra Mari pannalamla Ithu nalaiya ealai manavargalai migavum pathikum makkalum tharamana kalvi Eana private school ku poratha korachu government school teacher ah question kekanum

    ReplyDelete
  3. Teachers enna than pandranga private school la vedu vidu Poi canvass pandra Mari pannalamla Ithu nalaiya ealai manavargalai migavum pathikum makkalum tharamana kalvi Eana private school ku poratha korachu government school teacher ah question kekanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி