தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!› - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2018

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை..!›



காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் அனைத்தும் வருகின்ற 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு இன்று செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வருகிற 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.அதே போல, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகளுக்கு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி வரை நடக்கிறது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 3 பகுதிகளாக தேர்வுகள் நடந்து வருகிறது. இத்தேர்வு முறையானது, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என மூன்று பகுதியாக தேர்வு நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது, காலாண்டு தேர்வுகள் அனைத்து வகுப்பினருக்கும் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைவதால் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாக அரசு அறிவித்தது.

மேலும், மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

5 comments:

  1. 10,11,12 SPECIAL CLASS EIRUKAATHA SIR?

    ReplyDelete
  2. Student க்கு Leave ok....but teacher க்கு எதுக்கு Leave..? மேலும் சம்பளமும் வீணாக கொடுக்கப்படுகிறது..இதை சொன்னால் நாட்டின் நிதிநிலைமையை பற்றி கவலைபடாமல் வீணாக கோபம் தான் படுவார்கள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி