11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி முதல்விலையில்லா மடிக்கணினி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி முதல்விலையில்லா மடிக்கணினி


11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம்முதல் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தரம் உயர்த்தப்பட்ட வினைதீர்த்தநாடார்பட்டி பள்ளி தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நீட் தேர்வு மையம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:தமிழகத்தில் கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம். அரசு பொதுத் தேர்வுகளில் ரேங்கிங் சிஸ்டம் ஒழிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் வெளியிட்டது தமிழகத்தில் மட்டும்தான். நிகழாண்டு 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சீருடை மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் சீருடை மாற்றப்பட்டு, தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு அரசே சீருடையை வழங்கும்.வரும் ஜனவரி முதல் வாரத்தில் 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். அதேபோல் அடுத்த மாதம் முதல் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும்.அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 2 முடித்தாலே வேலை என்ற உத்தரவாதம் என்கிற நிலை ஏற்படுத்தப்படும். சி.ஏ. படிப்புக்கு 25 ஆயிரம்பேருக்கு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

 3 ஆயிரம் பள்ளிகளில் 6, 7, 8 -ஆம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 9, 10, 11 -ஆம் வகுப்புகளுக்கு இன்டர்நெட் வசதியும் செய்து தரப்படவுள்ளது. எந்தப் பள்ளியிலும் ஆசிரியர் பணியிடங்கள் காலி என்ற நிலை இனி இருக்காது. அரசுப் பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.தொடர்ந்து 136 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். ஒளவையார் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு மையத்தையும்திறந்து வைத்தார்.

விழாவில். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், ஆதிதிராவிடர் -பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.

2 comments:

  1. Computer subject க்கு Teacher Post போடாம computer கொடுத்து என்ன பயன்..?

    ReplyDelete
  2. இது எப்படி இருக்கு என்றால்்
    வீடு கட்டுவதற்கான திட்டத்தில் முதலில் அழங்காரமா
    கூரையை போடுவதுபோல்(லேப்டாப் வழங்குவது).......
    முதலில் அடித்தளம் போடவேண்டும் (அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில்கணினி ஆய்வகங்கள் அமைக்கவும்)
    பின்னர்
    நான்கு புறமும்தூண்கள்(b.edமுடித்த கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்)
    அமைக்க வேண்டும்...
    கடைசியாக அழங்காரமான கூரைகள் (மாணவர்களின் கையில் மடிகாகணினி வழங்குவது, மற்ற ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்குவது செய்யலாம்)
    அமைந்து அழகுபடுத்தும்.....
    தலைகீழாக செய்வதால்
    காலவிரையம்,
    பணவிரையம்,
    மற்றும்
    உழைப்பு விரையம்....
    உணர்ந்து
    கொள்கை முடிவு செய்து செயல்படுத்தினால்
    அஅனைத்து தரப்புக்கும் பயன் தரும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி