ஏழை எளியோருக்காக ரூ.14500 கோடி ஒதுக்கிய அமேசான் நிறுவனர்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2018

ஏழை எளியோருக்காக ரூ.14500 கோடி ஒதுக்கிய அமேசான் நிறுவனர்.!



அமேசான் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் தனக்கு சொந்தமான சொத்துக்களில் பெருமளவு பங்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும் என அறிவித்தார்.

உலக பணக்காரர்களின் டாப்-10 பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஜெஃப் தொண்டு நிறுவனங்கள் மூலம் 2 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,500 கோடி செலவிடப்படும் என அறிவித்திருக்கிறார்.இது குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். அதில் தனது அறக்கட்டளை மூலம் வீடு இல்லாதோரின் குடும்பங்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500 கோடி (2 மில்லியன் டாலர்) நிதி உதவி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் குறைந்த வருவாய் உள்ளோரின் குழந்தைகள் படிக்க மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் பதிவிட்ட போஸ்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெசோஸ் டே ஒன் ஃபன்ட் (Bezos Day One Fund) என்ற பெயரில் இதற்கென புதிய அமைப்பை ஜெஃப் பெசோஸ் துவங்கி இருக்கிறார்.கடந்த ஒருவருடமாத எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு தற்சமயம் ஜெஃப் ட்வீட் மூலம் வெளியாகியுள்ளது.

முன்னதாக 2017-ம் ஆண்டு ட்விட்டரில் அவசர தேவை மற்றும் நீண்ட காலத்திற்கு அதன் நன்மை நீடிக்கும் படியான யோசனைகளை வழங்குமாறு கேட்டிருந்தார்.அவ்வாறு தனக்கு பல்வேறு பதில்கள், யோசனைகள் ஆக்கப்பூர்வமாகவும், உதவிகரமாகவும் இருந்தது என அவர் தெரிவித்து, கருத்துக்களை பாராட்டுவதாகதெரிவித்தார். அந்த வகையில் தனக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் இரண்டு நலத்திட்டங்களை தேர்வு செய்திருக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி