பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1.62 கோடி நிவாரண உதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1.62 கோடி நிவாரண உதவி



பள்ளிக் கல்வித் துறை சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ.1.62 கோடி மதிப்பிலான நிவாரண உதவி பொருள்கள் திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின்பேரில், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு துறை மூலமும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, ஏற்கெனவே ஈரோட்டில் இருந்து முதல்கட்டமாக பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.இரண்டாம் கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய10 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் அளித்த நிவாரண பொருள்கள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருநெல்வேலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.ரூ.1 கோடியே 62 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் 22 லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைஅமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ். முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்தி முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி