அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2018

அரசு கலைக் கல்லூரிகளில் 1,883 ஆசிரியர்கள் நியமிக்க தமிழக அரசு அனுமதி : அரசாணை வெளியீடு


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 1883 கவுர விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்து ஆணையிட்டுள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணை:கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் இடங்களில் 1683 கவுரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. மேலும், மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த மே மாதம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பி.எட் கல்லூரிகளில் 2018-19ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 2640 காலிப் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கவும், அதற்கான நிதி ஒதுக்கவும், வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்துக் கொடுக்கவும் ஆணை வெளியிட கேட்டுக் கொண்டார். கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பி.எட் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை 1883 கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை (கூடுதல் 1) பணியமர்த்த அனுமதியும், திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இக்கல்வியாண்டு முதல் பின்பற்றவும் அரசு ஆணையிடப்படுகிறது.  இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 comments:

  1. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற PG TRB தேர்வில் வேதியியல் பாடத்திற்கான தேர்வில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்து விசாரணை முடிந்து ஆறு மதிப்பெண் வழங்கி உத்தரவிட்டனர். இதற்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    ReplyDelete
  2. PG TRB இந்த மாத இறுதிகுள் வரும்

    ReplyDelete
  3. வந்தால் சந்தோசம்

    ReplyDelete
  4. அனைவரின் வீட்டிலும் 🔥 தீப ஒளி ஏறும் மகிழ்ச்சி பொங்கும்

    ReplyDelete
  5. அதே போல் தொகுப்பூதியத்தில் அமைச்சரையும் நியமனம் செய்து கொள்ளலாம்...சட்டத்தை மாற்று

    ReplyDelete
  6. அதே போல் தொகுப்பூதியத்தில் அமைச்சரையும் நியமனம் செய்து கொள்ளலாம்...சட்டத்தை மாற்று

    ReplyDelete
  7. அமைச்சர்களையும் இனி தொகுப்பூதியத்திலே நியமனம் செய்து கொள்ளலாம்...சட்டத்தை மாற்றுங்கள்

    ReplyDelete
  8. அமைச்சர்களையும் இனி தொகுப்பூதியத்திலே நியமனம் செய்து கொள்ளலாம்...சட்டத்தை மாற்றுங்கள்

    ReplyDelete
  9. Varum election i ellarum purakkanikka vendum frds

    ReplyDelete
  10. They are not giving guest lecture post easily.politics plays everywhere

    ReplyDelete
  11. Replies
    1. worst and cheating government..intha govt anambi irunthavanga life nadutheruvil..private shl and college la velachenchu polachunga family a paarunga friends..inime ivanungala namburathu waste..

      Delete
  12. Everything is election stunt, they won't fill any vacancy.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி