1,920 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2018

1,920 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.55 இலட்சம் செலவில் புதியதாக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கலெக்டர் கதிரவன் தலைமையில் இன்று நடந்தது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் காமராஜர் பிறந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 மாணவ, மாணவியருக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதமும் இந்த ஆண்டு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார். இவ்விழாவில் ஈரோடு எஸ்பி சக்திகணேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி