பிளஸ்-1 தேர்வை மீண்டும் கை கழுவும் தனியார் பள்ளிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2018

பிளஸ்-1 தேர்வை மீண்டும் கை கழுவும் தனியார் பள்ளிகள்!


பிளஸ்-2 முடித்த பிறகு கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் அங்கு முதல் வருட பாடத்திட்டத்தை கையாள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுதேர்விலும் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.

பிளஸ்-1 பாட திட்டத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள்நடத்தாமல் புறக்கணித்து விட்டு அதிக தேர்ச்சிக்காக பிளஸ்-2 பாட திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததே காரணம் என தெரிய வந்தது.அதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 தேர்வை பொதுதேர்வாக அரசு அறிவித்தது. மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மதிப்பெண்கள் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிப்புக்கு தலா 600 மதிப்பெண் வீதம் தனித்தனியாக மார்க் சான்றிதழ் வழங்கப்படும்.மேலும் உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமேபோதுமானது என்றார். தற்போதைய திட்டத்தினால் கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், பாடங்களை சரிவரபடிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.எனவே உயர்கல்வியில் சேர பிளஸ்-2 மதிப்பெண் மட்டுமே போதுமானது என உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதற்கு சில ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அரசின் இத்தகைய முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும்சூழ்நிலை ஏற்படும்.அரசு பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்திட்டத்தை விட பிளஸ்-2 பாடத்திட்டத்துக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். ஏனெனில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் காட்டுவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்போதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு சமமான முக்கியத்துவம் அளித்து வந்தனர். ஆனால் தனியார் பள்ளிகள் பிளஸ்-1 பாடத்தை தவிர்த்து விட்டு பிளஸ்-2 தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் நிலை இருந்தது என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் சுரேஷ் தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் சேர்ந்து பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் பங்கேற்கிறார்கள். அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களின் வழியே தான் போட்டி தேர்வுக்கான பயிற்சியை பெற முடியும்.

இந்த சூழ்நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறைக்கப்படும் போது மாணவர்களால் நல்ல ஊக்கத்துடன் படிக்க இயலாது என்றும் அவர் கூறினார்.இருந்த போதிலும் அரசின் தற்போதைய முடிவை தனியார் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றுள்ளனர். உயர் கல்வியில் சேர 1200-க்கு பதிலாக 600 மதிப்பெண் சான்றிதழே போதுமானது என்ற அரசின் அறிவிப்பு மாணவர்களின் மனச்சுமையை பெரிதளவு குறைக்கும் என தெரிவித்துள்ளனர்.

7 comments:

  1. If 11th not considered for higher studies, it will be total waste for the public exam. What the new method introduced it will be utter failure

    ReplyDelete
  2. Plus 1 padikaama plus 2 padinganu tn gvt soluthu

    ReplyDelete
  3. Koranku kaila kedaicha poomaalai. ..now our education system

    ReplyDelete
  4. POONKAPPA NEENKALUM UNKA ARIVIPPUM.TOTALA ORU MUDIVU EDUTHU SOLLUNKA.THINAM ORU ARIVIPPU.MUDIYALLA.

    ReplyDelete
  5. +1 mark higher studies Ku vendam nu sonnenga.OK.next year sollaporanga students +2 harda irukkunu.Appa govt.enna sollum.No +2 examna.

    ReplyDelete
  6. இதுக்கு ஒரே வழி மத்த மாநிலங்கள்ள இருக்குற மாதிரி பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு சேர்க்கை அப்போ நுழைவு தேர்வு வைக்கணும், அதுல பாஸ் பண்ணா மட்டுமே சேர்க்கை, நீ 11 படி இல்ல படிக்காம போ, குறைந்த பட்சம் 12ஆம் வகுப்புல தேர்ச்சி, மீதி எல்லாமே நுழைவு தேர்வு மதிப்பெண் அப்படின்னு இருந்தா எவனும் 11ஆம் வகுப்பு படிக்காம ஏமாத்த முடியாது, அந்த நுழைவு தேர்வுல ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கேள்விகள் இருக்கணும், இப்போ பொறியியல் படிக்கனும்னா இயற்பியல் வேதியியல் கணிதம், இல்ல மருத்துவம்னா இயற்பியல் வேதியியல் உயிரியல், BCOMனா கணக்கு பதிவியல், பொருளாதாரம், போன்ற பாடங்கள்ல நுழைவு தேர்வு வைக்கணும்,

    இதுல சில முட்டாள்கள் லூசு மாதிரி ஏன் நுழைவு தேர்வு வைக்கணுன்னு கேப்பான், அவனுக்கு சொல்லுறேன், 100 சீட் இருக்குற ஒரு கோர்ஸ்க்கு 1000 பேரு அப்ளிகேசன் போட்டா தேர்வு வச்சு தான் எடுக்கணும், அப்படி ஒரு படிப்புக்கு அந்த அளவுக்கு போட்டி இல்லேன்னா விண்ணப்பம் போடுற எல்லாருக்குமே சீட் கிடைக்கும், இது இப்படி தான் பண்ணி ஆகணும்,

    நுழைவு தேர்வு மட்டுமே தீர்வு, மற்றபடி பதினொன்றாம் வகுப்புக்கு பொது தேர்வு, ஒருங்கிணைந்த மதிப்பெண் எல்லாமே ஏமாத்து வேலை தான்,

    அந்த நுழைவுத் தேர்வுல அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை குடுக்கணும், கோட்டா குடுக்குற மாதிரி, அப்ப எவன் தனியார் பள்ளில படிப்பான், எல்லாமே அரசாங்க பள்ளிக்கு தான் வருவான், ஆனா நான் சொன்னது எல்லாம் சினிமால கூட வராது,

    ReplyDelete
  7. Govt schoola apdiyeah pudingi thalliduvaanunga .. Anga 12 Th olunga nadatha maatanunga.. 11 th 12 Th rendum nadaaaaathi kilichuttalaum..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி