தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

தயார் நிலையில் 2ம் கட்ட புதிய பாடத்திட்டம்

தமிழகத்தில், 10 மற்றும் பிளஸ் - 2விற்கான புதிய பாடத்திட்டங்கள் டிசம்பரில் வெளியாகும் வாய்ப்புள்ளது," என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:

 பள்ளி கல்வித்துறையில், 6, 9, 10 வகுப்புகள் மற்றும் பிளஸ் 1க்கு புதிய பாடத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டு குவிகிறது. ஆசிரியர்களுக்கு தான், சவாலாக இருக்கும்; மாணவர்களுக்கு இருக்காது. முறையான பயிற்சியால், ஆசிரியர்களுக்கும் கற்பித்தல் எளிதாகி விடும். இரண்டாம் கட்டமாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு டிசம்பரில் வெளி வரவுள்ளது. அமைச்சர், அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 புதிய பாடத்திட்டங்களால் இரண்டு ஆண்டுகள் வரை, ஆசிரியர்கள் பிரத்யேகமாக பயிற்சி பெற வேண்டும். பாடம் நடத்துவதற்கு நேரம் இல்லை, என ஆசிரியர்கள் தெரிவிக்க கூடாது. திட்டமிட்டு உரிய காலத்திற்குள், பாடத்தை நடத்தி முடிக்க வேண்டும். அலுவலக பணிக்கு ஆசி ரியர்களை ஈடுபடுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி