3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2018

3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றது ஏன்?


அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 7 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த  ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டு போராடி வருகின்றனர்.

கடந்த 25ம் தேதி  காலை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு வந்த  500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அங்குள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்தின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஆசிரியர்கள்  தொடர்ந்து 3 நாட்களாக டிபிஐ வளாகத்தில்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தொகுப்பு ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
 இதற்கு பிறகும் நேற்று போராட்டத்தை ஆசிரியர்கள் தொடர்ந்தனர்.

 இதனால் நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை  கைது செய்து பல்வேறு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அவர்களை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு  பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் போலீசார் இறக்கிவிட்டுச் சென்றனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சேசுராஜா அறிவித்தார். 

5 comments:

  1. முட்டாள்கள் கூடாரம் தமிழக சட்ட சபை.

    ReplyDelete
  2. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் லேப்டாப் கொடுத்து சீமராஜா படத்தில் கூறுவதுபோல் படம் பார்க்க வைக்க இந்த அரசிற்கும் அரசியல் வியாதிகளுக்கும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி வீணடிக்க முடிகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ற நிலை என்ற கொள்கையைக் கூட வைக்க முடியவில்லை. ஏன் என்று யுகித்துக் கொள்ளுங்கள். ஆனால் அனைத்து வேலைகளையும் பள்ளிகளில் ஆன்லைன் என்று கூறி அதற்காக கணிப்பொறி இயக்குவதற்கும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் கணிப்பொறி பாடம் வைத்துவிட்டு பாடம் நடத்தவும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. அமைச்சர் கூறுவது போல் பகுதிநேர (2 மணி நேர) ஆசிரியர்கள் பள்ளி நேரம் முழுமைக்கும் மட்டுமல்லாது வீட்டிலும் தலைமையாசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் பணிபுரிந்து ஆன்லைனில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொடுக்கிறார்கள். இதற்காக கொடுக்கப்படும் சம்பளம் 7700. இந்த சம்பளத்தில் மக்களுக்காக பாடுபடும் (?) அரசியல் வியாதிகள் எத்தனை நாட்கள் சாப்பிடுவார்கள்? இந்த பகுதி நேரம் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தது யார்? மற்ற நேரங்களில் எங்கு வேலைக்கு செல்வார்கள்? ஏன் இப்படி அனைத்து துறைகளிலும் 7500 ஊதியம் என்று நியமிக்க ஆரம்பித்து விட்டீர்கள்? இப்படி பல்லாயிரக்கணக்கான (நர்ஸ் ..... உட்பட) பணியிடங்களில் நியமித்து விட்டு பல்லாயிரக்கணக்கானோர் குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துகிறீர்கள்? அரசே இப்படி கால்வயிற்றுக்கு கூட போதாத சம்பளத்தினை ஊதியமாக கொடுக்க இறங்கலாமா? மற்ற இடங்களிலெல்லாம் கோடி கோடி என்று ஒதுக்கிவிட்டு இவர்களுக்கு மட்டும் இவ்வளவு கேவலமான சம்பளத்தை நிர்ணயிக்க உங்களுக்கு எப்படிதான் மனசு வருகிறது? இவர்களையும், இவர்களது குடும்பத்தையும் அட்லீஸ்ட் ஒரு உயிராகவாவது நினைத்து அவர்களுக்கு குறைந்த பட்ச தேவைக்காகவாவது சம்பளத்தை நிர்ணயிங்கள். இப்படி 2 மணி நேரம் என்றும் வாரத்தில் 3 நாட்கள் என்றும் கேவலப்படுத்தாதீர்கள். மற்ற நேரங்களில் எங்கு சென்று பிச்சை எடுப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

    ReplyDelete
  3. நடத்தி முடித்த போட்டி தேர்வுக்கு பணி நியமன ஆணை வழங்காமல் வருட கணக்கில் இழுத்தடிப்பு செய்து வரும் அவல நிலை பள்ளி கல்வித்துறையில் நிலவி வருவது மிகவும் படித்தவர்கள் மத்தியில் விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி