60 பள்ளிகளில் விரைவில் அறிவியல் பரிசோதனைக் கூடம்: அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

60 பள்ளிகளில் விரைவில் அறிவியல் பரிசோதனைக் கூடம்: அமைச்சர் தகவல்


பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானத்தை வளர்க்கும் வகையில் 60 பள்ளிகளில் பரிசோதனைக் கூடம் (லேப்) அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தமிழகத்தின்அனைத்துத் துறைகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர்.

இதனால், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானத்தை வளர்க்கும் வகையில் தலா ரூ. 20 லட்சம் மதிப்பில் 60 பள்ளிகளில் பரிசோதனைக் கூடம் அமைக்கும் பணிகள்அடுத்த மாதம் இறுதிக்குள் தொடங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராகப் பதவி வகித்து வந்த உதயசந்திரன் மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு அரசுச் செயலாளரை எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என்றார்.

4 comments:

  1. மீதமுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் எப்போதுநிரப்பபடும்.

    ReplyDelete
  2. viraivil entral adutha katchi aatchiyil..

    ReplyDelete
  3. கல்வித்துறையின் சோதனைக் காலம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி