தமிழகத்தில் 662 தொடக்கப் பள்ளிகளை மூட அரசு தீவிரம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2018

தமிழகத்தில் 662 தொடக்கப் பள்ளிகளை மூட அரசு தீவிரம்?



தமிழகத்தில் 662 அரசு ஆரம்பப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் தமிழக அரசு நடத்திய ஆய்வில் 900 தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் 10-க்கும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த பள்ளிகளில் மாணவர்சேர்க்கையை உயர்த்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.

ஆனால் உத்தரவிற்கு பின்னரும் 662 ஆரம்பப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கை பற்றியும் அரசு ஆலோசனை செய்து வருகிறது.

மூடப்படும் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்காக மதிய உணவுதிட்டம், விலையில்லா சீருடைகள் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் குறிப்பிட்ட அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை குறைந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

19 comments:

  1. அன்று காமராஜர் ஐயா அனைத்து கிராமங்களும் அரசுபள்ளியை திறந்தார் இன்று அரசு பள்ளிகளை மூடும் அவலம் இந்த அவலத்திற்கு காரணம் யார்? மக்களே சிந்தியுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்

      Delete
  2. கடையை மட்டுமே திறங்க?

    ReplyDelete
  3. காமராசர் காலத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் குழந்தைகள் படித்தனர்

    ReplyDelete
  4. தனியார் பள்ளியில் அட்மிஷனுக்கு முதலில் நிற்ப்பது அரசு பள்ளி ஆசிரியர்

    ReplyDelete
    Replies
    1. அரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்

      Delete
  5. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் ஆசிரியர் கிடையாது

    ReplyDelete
  6. இதுதான் கல்வித்துறையின் சாதனையா?

    ReplyDelete
  7. இந்நிலைக்கு முதற் காரணம் நீங்களே.தரமற்ற கல்வி தான் இதற்கு முதற் காரணம்.இதே நிலைதான் தனியார் பொறியியல் கல்லூரியில்.அதற்கும் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. அரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்

      Delete
  8. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் சாதனை இதுதான்.அரசு பள்ளிகளை மூடுவது சாதனையா?

    ReplyDelete
  9. ஐயா,
    இந்த அரசு ஊழியர்கள் சங்கங்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கள் என்ற பெயரில் உள்ள அமைப்புக்கள் அனைத்தும், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த மாதிரியான பொதுவான விவரகாங்களுக்காக என்று தான் குரல் கொடுக்கப்போகின்றனரோ????????

    ReplyDelete
  10. Teaching not proper so that admission not happening in govt schools.

    ReplyDelete
  11. Childrens are eager to learn many thing but teacher always giving them writing work that to numeric 1 to 1000. It is very pethatic

    ReplyDelete
  12. Yanda yaruda library poi padikiiranga

    ReplyDelete
  13. அரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்

    ReplyDelete
  14. Self finance LA D.T.Ed., B.Ed., B.E.,college varappavey theriyum Kalvi Alangolam nu.Govt.stu.Ku M.B.B.S.,BDS.,Agri.,B.E.,LA Reservation OK pannunga. Parents q LA govt.scholla nippanga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி