கட்டுரைப் போட்டியில் வென்ற 7-ம் வகுப்பு நெல்லை மாணவி நாசா பயணம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

கட்டுரைப் போட்டியில் வென்ற 7-ம் வகுப்பு நெல்லை மாணவி நாசா பயணம்



திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் அறிவியல் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 7ம் வகுப்பு மாணவி நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குசெல்ல தோ்வாகி உள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருபவா் மாணவி வளா்மதி. இவா் கடந்த மாா்ச் மாதம் “ஏ டே இன் ஸ்பேஸ்” (A Day in Space) என்ற தலைப்பில் நடைபெற்ற இணையவழி அறிவியல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டாா்.932 வாா்த்தைகளில் கட்டுரை எழுதிய மாணவி வளா்மதி போட்டியில் வெற்றி பெற்றாா். போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல வளா்மதி தோ்வாகி உள்ளாா்.

வருகிற நவம்பா் மாதம் வளா்மதி நாசாவிற்கு செல்ல உள்ளாா்.இந்நிலையில் மாணவி வளா்மதியின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் அவரது பள்ளி தலைமை ஆசிரியா் மாணவிக்கு தங்க நகையை பரிசாக வழங்கி பாராட்டு தொிவித்துள்ளாா்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி