7,000 அரசு பள்ளிகளில் 'டிஜிட்டல்' வகுப்பறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2018

7,000 அரசு பள்ளிகளில் 'டிஜிட்டல்' வகுப்பறைகள்

''மாநிலம் முழுவதும், 7,000 அரசு பள்ளிகளில், 'டிஜிட்டல்' வகுப்பறைகள் அமைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் கூறினார்.
சென்னை, அரும்பாக்கம், அரசு மேல்நிலைப் பள்ளியில், டிஜிட்டல் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

இதை, பிரதீப் யாதவ் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: மாநிலம் முழுவதும், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. இதற்கு, பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், முன்னாள் மாணவர்களும், நிதி உதவி செய்கின்றனர். இந்த பள்ளியில், தமிழ்நாடு அறக்கட்டளை வாயிலாக, 30 லட்சம் ரூபாய் செலவில், டிஜிட்டல் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், 35 கணினிகள் வழியாக, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வசதி செய்யப்பட்டுஉள்ளது.

மாநிலம் முழுவதும், 7,000 அரசு பள்ளிகளில், மத்திய அரசின் திட்டத்தில், டிஜிட்டல் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. புதிய பாடத்திட்ட புத்தகங்களில், 'க்யூ.ஆர்.கோடு' முறை உள்ளது. இதை பயன்படுத்தி, 'வீடியோ' வழியாக, மாணவர்கள் பாடங்களை படிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில்,பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, திருவளர்செல்வி, பள்ளிதலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

2 comments:

  1. கணினி B.Ed படித்தவர்களை பணிநியமனம் செய்தால்தான் இத்திட்டம் வெற்றிபெறும்..இல்லையெனில் Waste........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி