கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2018

கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்


கோபிச்செட்டிப்பாளையம்: அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நாளை முதல் நிரப்பப்படும். .  பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது.

  பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.-7,500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள்.

  அதே நேரத்தில் 11ம் வகுப்பிற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12ம் வகுப்பிற்கு செல்ல முடியும். அதே போன்று மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 12ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்விக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 3000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அந்த பணிகள் முடிவுற்றவுடன், தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கணிணி ஆசிரியர் பணியிடம் ரூ-.7,500 சம்பளத்தில் நிரப்பப்படும். கணிணி ஆசிரியர் பணியிடமும் பி.எட் பட்டம் பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படுவர் என தெரிவித்தார்.

திரு வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

8 comments:

  1. What is the selection procedure sir

    ReplyDelete
  2. 7500 ஒவாய்க்கு வேலைக்கு போறதுக்கு கொத்தனார் வேலைக்கு போகலாம், போற பக்கி பயலுங்கள சொல்லணும், ஏண்டா உங்க தகுதிய நீங்களே ஏன் கொறச்சுட்டு அந்த வேலைக்கு போகணும், அவங்கள பரிச்சை வச்சு வேலை போட சொல்லுங்க, இல்லனா அந்த தொகுப்பூதியத்துகு போகாதிங்க, நிரந்தர வேலை தான் தீர்வு,

    ReplyDelete
  3. Posting Podaradhu podarenga apdiye permanent posta potta parava illa. Ipdi temporary posta pottengana epdinga sir.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி