தமிழகத்தில் 77% முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

தமிழகத்தில் 77% முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலி: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 77 சதவீதம் முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 332 பொறியியல் கல்லூரிகளில் 16 ஆயிரத்து 728 எம்.இ.; எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவற்றில் சேருவதற்காக நடத்தப்பட்ட கேட் மற்றும் டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது.

கலந்தாய்விற்கு 6 ஆயிரத்து 736 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 3 ஆயிரத்து 891 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று பாட பிரிவுகளையும், கல்லூரிகளையும் தேர்வு செய்தனர்.

இதனால் தற்போது பொறியியல் கல்லூரிகளில் 23 சதவீத முதுநிலை படிப்பு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாகவும் 12 ஆயிரத்து 837 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.  

2 comments:

  1. Apdi na... 77% extra iruku nu artham.. varavan poravanuku ellam clg start panna permission kodutha... idhu thaan nilamai

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி