ஒரே மாவட்டத்தில் 92 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2018

ஒரே மாவட்டத்தில் 92 அரசுப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரத்து


மதுரை மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 92 அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு ஆண்டு பராமரிப்பு மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் ஒரு வகுப்புள்ளவற்றுக்கு ரூ.10 ஆயிரமும், இரு பிரிவு வகுப்புகளைக் கொண்ட பள்ளிகளுக்கு ரூ.17 ஆயிரமும் எனபராமரிப்புச் செலவு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியரைத் தலைவராகக் கொண்ட மேலாண்மைக் குழுவினர், இந்த நிதி மூலம் குடிநீர், மின் சாதனங்கள், கழிப்பறைகள், எழுதும் பலகைகள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். இதேபோல் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் பராமரிப்பு நிதி வழங்கப்படுகிறது.ஆனால், நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வித் திட்டமானது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாக (சமக்ர சிக்ஷா) அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில கட்டுப்பாடுகளும், மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஆண்டு பராமரிப்பு நிதி ரத்துசெய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் 959 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.இவற்றில் ஊராட்சிப் பள்ளிகள் 653, மாநகராட்சிப் பள்ளிகள் 26, நகராட்சிப் பள்ளிகள் 8, கள்ளர் பள்ளிகள் 104, சமூக நலத்துறை பள்ளி 1, உதவி பெறும் பள்ளிகள் 159 ஆகியவை அடங்கும்.

இப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்-மாணவர் விகிதமானது 1:18 என்ற அளவில் இருந்தது. ஆனால், நடப்பாண்டில் சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.இதனால், 15 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 92 பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புற பள்ளிகளாக உள்ளன.

மாநிலம் முழுவதும் இது போல் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் நிதியை இழக்கும் நிலையில் உள்ளன.இதுகுறித்து கல்வி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,கடந்த சில ஆண்டுகளாகவே தொடக்கப்பள்ளிகளுக்கான பராமரிப்பு நிதியை முறையாக செலவிடவில்லை என்ற புகார் எழுந்தது.அதனடிப்படையிலே தற்போது மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி நிதி மறுக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை கூடுதலாக்கி நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

தலைமை ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறுகையில், கிராமப்புறங்களிலும் தற்போது தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆகவே, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது பகீரத முயற்சிக்குப் பிறகே நடைபெறுகிறது.ஆனால், பராமரிப்பு நிதியை மறுப்பது என்பது அரசு தொடக்கப் பள்ளிகளை மூடுவதற்கான வழியையே ஏற்படுத்தும் என்கின்றனர்.

4 comments:

  1. ஆலையம் செய்வோம்
    பள்ளிச் சாலைகள் செய்வோம் என்றார் பாரதியார்.......
    மேலும்
    கோவில்கள் அனைத்தும் பள்ளிக் கூடங்களாக்குவோம் என்றான்...
    இங்கே இருக்கின்ற கொஞ்சநஞ்ச பள்ளிகளையும் மூடுவதற்கு காரணகாரியங்களைத்தேடுவதிலேயே தங்களின் மூளையையும் சிந்தனையையும், செயல்பாடுகளையும் செலுத்துகின்றார்கள்....
    மூடுவதற்கு காரணகாரியங்களைத்தேடுகின்ற அரசு
    ஏன்
    தொடர்ந்து செயல்படவைப்பதற்குத் தன் ஆளுமையை மும் திறமையை மும் காட்டமாட்டீங்கின்றது...
    படித்து சமூகத்தில் தான்
    ஏன்
    எதற்கு
    எப்படி என்ற கேள்விகளை எழுப்பிஅதற்கான தீர்வுகளை பொதுவானதாக அனைத்து மனிதர்களுமான(குறிப்பிட்ட சில சமூகத்திற்கு மட்டும் இல்லாமல்)தீர்வைக் கொண்டதாக சிந்தித்து பழைய ன கழித்தும் புதியன புகுத்தழுமாக செயல்படுத்த முடியும்...
    எனவே
    மக்களின் கல்வியறிவு வை எவ்வாறு குறைக்கலாம் என்று சிந்திக்காமல் எவ்வாறு பெருக்கலாம் என்று அரசு சிந்தித்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  2. evvalavu periye kevalam theriyuma

    ReplyDelete
  3. People are worst when we compare the government

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி