நவம்பர் முதல் "காலையில் Bill, மாலையில் பணம்" - கருவூலத் துறை ஆணையர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2018

நவம்பர் முதல் "காலையில் Bill, மாலையில் பணம்" - கருவூலத் துறை ஆணையர்


அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் குறித்த திறனூட்டல் பயிற்சி நடந்தது.

"தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் ஜவஹர் தலைமை வகித்து பேசியதாவது"கருவூலம் மற்றும் கணக்குத் துறை 1962ம் ஆண்டு முதல், தனித் துறையாக செயல்பட்டு வருகிறது.தற்போதுள்ள நடைமுறைப்படி, கருவூலகத்தில் பட்டியல் சமர்ப்பித்த, 10 நாட்களுக்கு பிறகே, பயனாளிகளுக்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

புதியதாக உருவாக்கப்படும் நேரடி இணைய வழி பட்டியல் சமர்ப்பிக்கும் திட்டத்தின் மூலம், கருவூலகத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளிலேயே, தொகை வரவு வைப்பதற்கான வாய்ப்பும், காகித பயன்பாடு குறைவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது.ஒவ்வொரு பரிவர்த்தனையின் பல்வேறு நிலைகள் கண்காணிக்கப்படுவதால், சிறப்பாக நிர்வகிக்க வழி வகுக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் மூலமான பயன்பாடு முறைப்படுத்தப்படுவதால், மனிதவள பயன்பாட்டில் ஏற்படும் தவறுகள், முறைகேடுகள் தவிர்க்கப்படும்.நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டு வரும் புதிய திட்டத்தால், தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணி பதிவேடு பராமரிப்பு எளிமையாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி