வங்கிகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2018

வங்கிகளின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு : மத்திய அரசு உத்தரவு


சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான, பி.பி.எஃப்., சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்டவைகள் வட்டி விகிதத்தை 0.4% அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் அதிகரித்து வரும் வைப்பு விகிதங்களுக்கு ஏற்ப. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படும்.

இதன்படி, 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.3 சதவீதத்திற்கு பதில், 8.7 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இந்த வட்டி ஒவ்வொரு காலாண்டின் போதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சேமிப்பு வைப்பு தொகைக்கான ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதமாகவே இருக்கும்.

பிபிஎப் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான ஆண்டு வட்டிவிகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிஷான் விகாஸ் பத்திர வட்டிவிகிதம் 7.3 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி