'ஆசிரியரின் ஆயுள் குறைவு' -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2018

'ஆசிரியரின் ஆயுள் குறைவு' -பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''மாணவர்களை சமாளிப்பதால் ஆசிரியர்களின் ஆயுட்காலம் குறைகிறது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில், 23 மாவட்டங்களைச் சேர்ந்த, 120 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா, ஈரோட்டில் நேற்று நடந்தது. விருது வழங்கி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:நடப்பாண்டில், ஆறு முதல், எட்டாம் வகுப்புவரை, 'ஸ்மார்ட் கிளாஸ்' ஆக மாற்றப்படும். படிப்புடன் மாணவர்களை நிறுத்தக் கூடாது. அவர்களுக்கு கள பயிற்சிக்கான வழிகளை ஏற்படுத்த, முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார்.இத்தனை பணிகளையும் அரசு திட்டமிட்டாலும், அதை சிறப்பாக செயல்படுத்துவது, ஆசிரியர்களின் பங்காகும். வீடுகளில், ஓரிரு குழந்தைகளை சமாளிப்பதையே பெரிய சவாலாக நினைக்கின்றனர்.

பள்ளிகளில், 40க்கும் மேற்பட்ட மாணவர்களை சமாளிப்பதால், ஆசிரியர்களின் ஆயுட்காலம் கூட குறைந்து விடுகிறது. அத்தனை அர்ப்பணிப்புடன், ஆசிரியர்கள், தங்கள் பணிகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

7 comments:

  1. Neenga job podirathukullae engaloda paathi aayutkaaalam mudinthuvitathu... Maanavargaludan meethi aayutkaaalam mudinthuvidum. Thiyaagigal anaivarum naangal mattumae.. we passed in tet but we sacrifice our job our life☹️

    ReplyDelete
    Replies
    1. well said sir.when will the tet case finish?.like weightage case it is also tase 2 yrs means our life totally vanished.

      Delete
  2. மாணவர்களைக் கூட சமாளிச்சிடலாம்...

    தினமும் ஒரு type ஆ பேசுற உங்கள தான் சமாளிக்க முடியல..

    ReplyDelete
  3. Nadavula konjam pakatha kanum paduthula vara mathiri daily sonathaiye solli saga adikatha da venna

    ReplyDelete
  4. ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியவர்களை அமைச்சர் ஆக்கினவனை செருப்பால அடிக்கணும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி