வருமான வரி செலுத்த தவறியவர்கள் என்ன செய்யலாம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

வருமான வரி செலுத்த தவறியவர்கள் என்ன செய்யலாம்?


2017-18ஆம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிந்துள்ளது. ஆனால், கேரளாவிற்கு மட்டும் வெள்ளப் பாதிப்பைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்யத் தவறியவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமான வரியைச் செலுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.  ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தால் ரூ.1000 மட்டும் அபராதமாக வசூலிக்கப்படும்.

டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ளும் வருமான வரிசையைச் தாக்கல் செய்யாவிட்டால் அபராதத்துடன், செலுத்த வேண்டிய வட்டிக்கு மாதம்தோறும் 1% வட்டி சேர்ந்துகொண்டே இருக்கும்.  ஏற்கெனவே, உரிய அவகாசத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அதில் ஏதேனும் தவறு இருந்தால் சரிசெய்யும் வசதியும் உண்டு. ஆனால் தாமதமாக தாக்கல் செய்பவர்களுக்கு இந்த வசதி கிடையாது. எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி