மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2018

மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு


அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி பயன்படுத்தப்படஉள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஒரு வகுப்பில் ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்றவிகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு  தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை  குறைவாக இருக்கும் பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. இதற்காக த னியாக குழு ஒன்றையும் பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளதாக ெதரிகிறது. மேற்கண்ட குழு கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ள நிலையில் தற்போது 500 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது.

எஸ்எஸ்ஏ சார்பில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்கான செலவுக்கணக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் தமிழகத்துக்கு கிடைக்க  வேண்டிய நிதி நிறுத்திக் வைக்கப்பட்டுள்ளது. தற்ேபாது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து கொடுத்த பிறகே மத்திய அரசின் நிதி  கிடைக்கும் என்று தெரிகிறது.

2 comments:

  1. EMIS க்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகம் இருப்பது போல் காட்டியவர்கள் நாட்டின்.......

    ReplyDelete
  2. EPD tet waitage Ku kuzhu amaichigale antha mathiriya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி