மாணவர்களின் எதிர்காலம் எங்களுடைய இதயம்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

மாணவர்களின் எதிர்காலம் எங்களுடைய இதயம்: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு



ஈரோடு மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும்பரிசளிப்பு விழா, நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரிசு வழங்கி, பேசியதாவது:மத்திய அரசு கொண்டு வரும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க இரண்டாண்டு காலமாகும். ஆனால், எட்டு மாதத்தில் மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை கண்டு மத்திய அமைச்சரே பாராட்டியுள்ளார்.அடுத்தாண்டே எட்டு வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் போது, நாடே ஒரு புரட்சியே ஏற்படும். பிளஸ் 2 முடித்தாலே, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் கல்வியாக மாற்றி அமைக்கப்படும். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, அடுத்தாண்டு சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.

மாணவர்களின் எதிர்காலம் தான் எங்களுடைய இதயம். நீங்கள் கவலைப்பட தேவையில்லை, எங்கள் இதயம் துடிக்க, எதிர்காலத்தில் எங்கள் லட்சிய பயணம் தொடரும். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

9 comments:

  1. Pg trb intha year conduct pannuvangala

    ReplyDelete
  2. சாமி !!!! உன்ன பத்தி நல்லா எங்களுக்கு தெரியும்....

    ReplyDelete
  3. ethayame illatha unnakku ethukkada ethayathatha patti pesura tet asiriyarkalin ethayatha norukiya senkottaya manavarkalin pinchu ethayatha norukki vidathe.

    ReplyDelete
  4. இன்னுமா இந்த உலகம் நம்புது.கொடுமை

    ReplyDelete
  5. டெட் தேர்வு எழுதினோம் எங்களையும் கொஞ்சம் இதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் இல்லாமல் உங்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது

    ReplyDelete
  6. டெட் தேர்வில் பாஸ் ஆனவர்கள் 92, 000 மட்டுமல்ல டெட் தேர்வை எழுத 12 லட்சம் பேர் இருக்கின்றோம் 12 லட்சம் எனக்கும் குடும்பம் உள்ளது அதை கவனித்து பார்க்கிறீர்கள் என்றாள் குறைந்தது 25 லட்சம் பேராவது இருப்போம் இவர்களின் ஒரு வாக்கை கூட உங்களால் வாங்க முடியாது எங்களுக்கு துரோகம் பண்ண மாதிரி உங்களுக்கும் நாங்கள் வைத்திருப்போம் ஒரு நாள் அந்த நாள் வரும் விரைவில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி