உதவித்தொகை அந்தந்த ஆண்டுகளில் ஒதுக்காவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? -உயர் நீதிமன்றம் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2018

உதவித்தொகை அந்தந்த ஆண்டுகளில் ஒதுக்காவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா? -உயர் நீதிமன்றம் கேள்வி


உயர் கல்விக்கான உதவித்தொகை அந்தந்த ஆண்டுகளில் ஒதுக்காவிட்டால்  மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உயர் கல்விக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் கல்வி தொகையை மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. இந்த தொகையை  மாநில அரசு, கல்லூரிகளுக்கு வழங்கி வருகிறது.ஆனால் 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மத்தியஅரசிடமிருந்து வரவேண்டிய 1,576 கோடி ரூபாய் வழங்கவில்லை என்பதாலும், தமிழக அரசு கேட்டு பெறவில்லை என்பதாலும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுவதாக வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தால் அமைச்சகத்தின் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அதனை பதிவு செய்த நீதிபதிகள், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் என்பது தாழ்த்தபட்ட பிரிவினருக்கான விவகாரங்களை மட்டுமே கவனிக்கும் என்பதால், பழங்குடியின மாணவர்களை கருத்தில் கொண்டு, மத்திய பழங்குடியின நலத் துறையை வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், கல்வி உதவித்தொகையை அந்தந்த கல்வியாண்டில் ஒதுக்காவிட்டால்,  மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், வழக்கு குறித்து மத்திய - மாநில அரசுகள், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல், மத்திய பழங்குடியின நலத் துறை  2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

2 comments:

  1. அந்த அந்த ஆண்டுகளில் போட்டி தேர்வு வைக்கலனாலும் பாதிக்கப்படுவார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி