பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - அண்ணா பல்கலை நிபந்தனை ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - அண்ணா பல்கலை நிபந்தனை !

பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற புதிய விதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பல்கலைக்கழக ஆட்சி மன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.ஹெச்.டி பட்டம் பெற லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் ஆட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய விதியை அமல்படுத்த வேண்டும் என்ற முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக பணியமர்த்தப்பட உள்ள பேராசியர்களுக்கு பொருந்தும் வகையில் புதிய விதியை நடைமுறை படுத்தலாம் என்று மற்றொரு  முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள பேராசிரியர்களை புதிய விதி பாதிக்கப்பட கூடாது என்று தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டுக்கு லஞ்சம் பெற்றதை போல பி.ஹெச்.டி பட்டம் பெற லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. புதிய விதிகளை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தை ஐஐடிக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் முன்னாள் துணை வேந்தர்கள் தெரிவித்துள்ளனர். 

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி