அரசு பள்ளி சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி இரண்டாவது நாளாக போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2018

அரசு பள்ளி சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி இரண்டாவது நாளாக போராட்டம்



அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு பள்ளிகளில் 2012ஆம் ஆண்டு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாதம் தோறும் 7ஆயிரத்து 700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி 500கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று காலை முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு அங்கேயே தங்கிய அவர்கள் இரண்டாம் நாளான இன்று டிபிஐ வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

18 comments:

  1. ஏழாண்டு காலம் குறைந்த ஊதியம் பெறும் பகுதி நேர ஆசிரியர்கள் பெரும் கவலையை அடைந்து வருகிறார்கள்.அரசு அவர்களை நியமனம் செய்யும் போது ஒரு பகுதிநேர ஆசிரியர் குறைந்தது மூன்று பள்ளிகளில் பணியாற்றலாம் என்று கூறி விட்டு இன்று வரையிலும் அதை நடைமுறை படுத்த வில்லை இந்நிலையில் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    ReplyDelete
  2. இது வரையில் பல்வேறு வகையான போராட்டம் நடத்தி வருகின்றனர்.மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் சென்ற முறை ஒரு குழு அமைக்கப்பட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.ஆனால் இது வரையில் எதுவும் செய்யவில்லை தற்போதைய நிலையில் இவர்கள் பெரும் ஊதியம் போக்குவரத்து செலவுக்கு கூட போதாத நிலையில் உள்ளது.இதை வைத்து வீட்டு வாடகை செலுத்த கூட முடியாது.பிள்ளைகளை படிக்க வைக்க முடியாது.மருத்துவசெலவு போன்ற எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஏழாயிரத்து ஏழுநூறு ரூபாய் இன்றைய சூழ்நிலையில் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்யும் ஆசிரியர்கள் மற்ற நாட்களில் எந்த வேலை செய்ய போகமுடியும். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.

    ReplyDelete
  3. வாழ்வாதார பிரச்சனை நிச்சயமாக அரசு தலையிட வேண்டும்...

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Replies
    1. Interview Vachu certificate verification pannithaan eduthrukkaanga

      Delete
    2. Enna interview ,enna kelvi ketanga,pls sollunga

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  7. Ella Exam correcta than nadakuthu TN la

    ReplyDelete
  8. பகுதி நேர ஆசிரியர்கள் அப்படியே வேலைக்கு வந்துவிடவில்லை. நேர்முகத் தேர்வை சந்தித்து தான் வந்திருக்கிரோம். உண்மையில் சொல்லபோனாசொல் நாங்கள் தான் முதல் முதலில் தேர்வை சந்தித்தவர்கள். அதன் பின்புதான் தேர்வு pattern கொண்டு வந்தார்கள்.எதையும் தெளிவாக புரிந்துக்கொண்டு comments பண்ணுங்க.

    ReplyDelete
  9. பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பது உண்மைதான். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் இன்றைய சூழலில் போதாது கண்டிப்பாக அவர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். எனினும் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக தென்படவில்லை. அதற்கான தெளிவான காரணங்களும் உள்ளது. பலர் 2001 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தங்களின் படிப்பை முடித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்தனர். பகுதிநேர ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போது பலர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி இந்த பணியில் சேர்ந்த காரணத்தால் உண்மையாகவே இந்த பணி கிடைக்கக் கூடிய நபர்களுக்கு கிடைக்கவில்லை. 2011 இல் படிப்பை முடித்தவர்களும் இந்த பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நடைபெற்ற சிறப்பாசிரியர் போட்டித் தேர்விலும் பல பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். எனவே தாங்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் 16000 இடங்களையும் காலிப்பணியிடங்களாக அறிவித்து உடனடியாக தேர்வு வையுங்கள் என அரசிடம் முறையிடுவது நியாயமான கோரிக்கையாக இருக்கும்.

    ReplyDelete
  10. If the part time teachers agitation is right....why they are not goto court??..for thier rights and eligibility and terms and conditions during the appointment period with government......as per the SSA norms this is only purly temporary job....and they made some important terms and conditions....part time teachers agreed all conditions that time....but now??????

    ReplyDelete
  11. சாதாரணமாக ஒரு 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்குபோட்டி தேர்வு எழுதி ஓராண்டு காலம் இழுத்தடிப்பு செய்து இன்றுவரை பணி நியமன ஆணை வழங்க முன் வராத நிலையில் ஆட்சியாளர்களின் அவல நிலை பள்ளி கல்வித்துறையில் உள்ளது.இந்நிலையில் பதினாராயிரம் காலிப்பணியிடங்களை தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு வைத்து பணி அமர்ந்துவது எந்த ஜென்மத்திலும் இவர்களால் முடியாது என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி