குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு -மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2018

குடும்ப அட்டையுடன் ஆதார் இணைக்க கெடு -மத்திய அரசு

குடும்ப அட்டையோடு ஆதாரை இணைக்கும் நடைமுறைக்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பதை தடுக்க, ஆதரோடு இணைக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களின் அனைத்து விவரங்களும் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. இதனை ஆதார் விவரங்களோடு பதிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, இதுவரை குடும்ப அட்டையை ஆதாரோடு பதிவு செய்யாதவர்கள், அக்டோபர் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி