பணி நிரந்தரம் செய்யக்கோரி: பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முற்றுகை போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2018

பணி நிரந்தரம் செய்யக்கோரி: பகுதிநேர சிறப்பாசிரியர்கள் முற்றுகை போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சுமார் 1,000 பேர் சென்னை டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்எஸ்ஏ) அரசு பள்ளிகளில் கடந்த 2012-ம் ஆண்டு 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, கணினி) நியமிக்கப்பட்டு தற்போது 12,600 பேர் பணியாற்றி வருகிறார்கள். தினசரி அரைநாள் வீதம் வாரத்தில் 3 நாட்கள் பணியாற்றி வரும்பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.7,700 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

6 ஆண்டு காலமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.இந்த நிலையில், பணிநிரந்தரம் செய்யக்கோரி 1,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நேற்று காலை 10 மணியளவில் சென்னை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும்என்றும் தரையில் அமர்ந்தவாறு கோஷமிட்டனர்.இதனால் டிபிஐ வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.

24 comments:

  1. நல்ல முடிவு வர வேண்டும் என்று நம்பி இறைவனை பிரார்த்திக்கிறோம்

    ReplyDelete
  2. , எதன். அடிபடையில் பணி நிரந்தரம் கேட்கிறார்கள்....

    ReplyDelete
  3. PTA மூலம் நியமிக்கப்படுகின்ற ஆசிரியர்கள் மிக குறைந்த ஊதியத்தில் நாள் முழுவதும் வேலை செய்கின்றனர் ..ஆன இவர்கள் வெறும் அரை நாள் மட்டும் வேலை செய்து விட்டு 7700 ரூபாய் பெறுகின்றனர்... இதில் பணி நிரந்தரம் வேற...

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் ஆறு ஆண்டுகள் வேலை செய்கிறார்களா .

      Delete
    2. நீ வந்து பார்த்தீயா நாங்க மூன்று அரை நாள் தான் பள்ளிக்கு வேலைக்குச் சென்றோம் என்று. எங்கள் கஷ்டம் பள்ளியின் சுவர்களுக்கு கூட தெரியும். நீ இந்த வேலைக்கு வந்து இருந்தால் உனக்கு இந்த வேலையோட கஷ்டம் தெரியும். ஏதாவது பேசுகிறேன் என்று சொல்லி எங்க பாவத்த கொட்டிக்காத. கணினி ஆசிரியர் வேலையை கேட்டு பார் அப்ப தெரியும் மூன்று அரை நாள் தான் வேலையா என்று

      Delete
  4. நாங்கள் 2013 லே TET பாஸ் பண்ணிட்டு இன்னமும் மிக குறைந்த ஊதியத்தில் பணி செய்து கொண்டு இருகின்றோம்

    ReplyDelete
    Replies
    1. Ne than punniyam senju irukiye appuram yen innum ithu Mari iruka....

      Delete
    2. sir trb la enna nadakkuthunu theriyuma +2 6 attai vachirukkavangalam bt asst theriuma department kulla vanthu parunga sir ennallam nadanthuikittu irukkunu theriyum

      Delete
  5. பொறாமை உன் வாழ்வை அழித்துவிடும் எங்கள் உணர்வை நம் உணர்வாக மதில் கொள் தாஸ்

    ReplyDelete
  6. பொறாமை உன் வாழ்வை அழித்துவிடும் எங்கள் உணர்வை நம் உணர்வாக மதில் கொள் தாஸ்

    ReplyDelete
  7. ஊரு இரண்டு பட்டால், ஒற்றுமையாக இருங்கள்

    ReplyDelete
  8. நடப்பது ஏழாவது ஆண்டு

    ReplyDelete
  9. Padithu trb all exam clear pannium varala,But kasta pattuthan vara venum antru avasiyam illaya...

    ReplyDelete
  10. Padithu trb SPL teach exam clear pannium varala,But kasta pattuthan vara venduum antru avasiyam illaya..

    ReplyDelete
  11. Padithu trb SPL teach exam clear pannium varala,But kasta pattuthan vara venduum antru avasiyam illaya..

    ReplyDelete
  12. எங்கள் வேதனையும் கஷ்டமும் உங்களுக்கு தெரியாது

    ReplyDelete
  13. சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்பே போராடி இருக்க வேண்டும் உங்களை நிரந்தரம் செய்தால் அவர்களை.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி