`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்டையனிடம் அரசுப் பள்ளி மாணவன் நேரில் மனு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2018

`உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்டையனிடம் அரசுப் பள்ளி மாணவன் நேரில் மனு!




12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சென்ற ஆண்டு முதல் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது தமிழக கல்வித்துறை. 11 மற்றும் 12-ம்  வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தி, 1,200 மதிப்பெண்களை ஆண்டுக்கு 600 மதிப்பெண்கள் என்று பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்ற ஆண்டு 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 'மேல் படிப்புக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல், 12-ம் வகுப்பு மதிப்பெண்களே எடுத்துக்கொள்ளப்படும்" என அறிவித்திருந்தார். இதுகுறித்து, கல்வியாளர்கள் பலர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவந்தனர். இந்நிலையில் நேற்று, ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்றிருந்த அமைச்சர் செங்கோட்டையனிடம், மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருக்கிறார்.
அம்மனுவில், "தற்போது ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மட்டும் உயர் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் வசதிபடைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கே நன்மை கிடைக்கும். இதனால், ஏழை மக்களின் அரசுப் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, ப்ளஸ் 1 மதிப்பெண்களையும் உயர் கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள், 50 விழுக்காட்டுக்குக் கீழ் மதிப்பெண்கள் பெற்றுள்ளனரே என்று கவலை தெரிவித்ததோடு, எங்களின் முடிவுக்குப் பலர் நன்றி தெரிவித்துள்ளதையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

8 comments:

  1. Pls conduct second transfer counselling for teacher 1000 kudumbam ungala kalam varaikkum valthum entum ammavin aaasiyil

    ReplyDelete
  2. Panam kooda varathu unga peyar than entaikkum nulaitthu nirkum panam vangi transfer order kodukkatheenga kodi punniyam pogum 5 6varudama kathurukkirom nethu select aagi entru palalatcham panam vangi transfer order nirvaga maruthal seiyathunga ennudaya amma 76 vavavhu sugar patient kaalil pun seel thaniya vasikiranga

    ReplyDelete
  3. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
    💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
    🦋
    🌸SCAorSC- SCIENCE


    CANDIDATE MALE&FEMALE
    🌸PG- BC Nadar- MSc Chemistry

    🌹 MBC- HISTORY
    MALE&FEMALE
    🌺 BE civil for MNC
    💐Dted - Bc and Mbc heavy Amount payable candidates

    💐music teacher and Drawing teacher immediately wanted

    🌷SCA-and BC PET உடற்கல்வி
    MALE&FEMALE
    Immediately contact +917538812269

    ReplyDelete
  4. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
    💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்
    🦋 Tamil BC Mbc
    🌸SCAorSC- SCIENCE


    CANDIDATE MALE&FEMALE
    🌸PG- BC Nadar- MSc Chemistry

    🌹 MBC- HISTORY
    MALE&FEMALE
    🌺 BE civil for MNC
    💐Dted - Bc and Mbc heavy Amount payable candidates

    💐music teacher and Drawing teacher immediately wanted

    🌷SCA-and BC PET உடற்கல்வி
    MALE&FEMALE
    Immediately contact +917538812269

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி