ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயிலும் நாகை மாணவிக்கு காமராஜர் விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2018

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயிலும் நாகை மாணவிக்கு காமராஜர் விருது



நாகையில் 11ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரீத்தாவிற்கு காமராஜர் விருது கிடைத்துள்ளது.

நாகையில் ஒரு தொண்டு நிறுவனம் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் தொடங்கியுள்ளது. இதில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்து எடுத்து குடும்ப சூழ் நிலையை போல் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த குழந்தைகள் கிராமத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தையை இழந்த பிரீத்தா என்ற மாணவியை அரசு மூலம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறார். இவர் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் பிரீத்தா நன்றாக படிப்பதோடு நடனம், கேரம் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு நடனம், கேரம் விளையாட்டுகளில் பங்குபெற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளார்.இதையடுத்து தமிழக அரசு பிரீத்தாவிற்கு படிப்பு மற்றும் நடனம், கேரம் போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றதை அடிப்படையாகக்கொண்டு காமராஜர் விருது வழங்கியது.

விருது சான்றிதழுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை கடந்த 5ம்தேதி சென்னையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி வழங்கினார்.காமராஜர் விருது பெற்ற மாணவி பிரீத்தாவை நடராஜன் தமயந்தி மேல் நிலைப் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள், மற்றும் எஸ்.ஓ.எஸ். தொண்டு நிறுவன நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ள சக மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

11 comments:

  1. வாழ்த்துக்கள் மா...

    ReplyDelete
  2. Super.Ur parents blessings will be with u forever..

    ReplyDelete
  3. நல்லதிறமையானமாணவி வாழ்த்துகள்

    ReplyDelete
  4. பெருமைக்குரியமணவியை உருவாக்க காரணமாக இருக்கும் தொண்டுநிறுவனம்மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் மனமார்ந்த நன்றியுடன்வணக்கம்

    ReplyDelete
  5. en anbu thankaiye en udan pirappe unnakku valthukkal.nee ellarukkum aatharavu ulla thankai.great salute for S O S Trust.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி