தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2018

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!



தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1 முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே பள்ளி வளாகங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

  1. water can, water tube, lab la irukura plastic jaman, neraya iruke, athellam epdi veliyethurathu, athuku enna maatru vali,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி