வழக்குகளை சமாளிப்பது எப்படி? பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2018

வழக்குகளை சமாளிப்பது எப்படி? பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை


பள்ளிக்கல்வி துறையில் நிலுவையில் உள்ள, 7,500 வழக்குகளை விரைந்து முடிக்க, துறையின் முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில், பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள பள்ளிகள், அலுவலகங்கள் மீது, 4,500 வழக்குகளும், தொடக்க கல்வி இயக்குனரகத்திற்கு எதிராக, 3,000 வழக்குகளும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பெரும்பாலானவை, ஆசிரியர்கள் நியமனம், பணி வரன்முறை, ஒழுங்கு நடவடிக்கைகள், உயர்கல்வி ஊதிய உயர்வு கோருதல், நீண்டகாலம் விடுப்பு எடுத்து, மீண்டும் பணி கேட்பது உள்ளிட்டவையாகும். இவற்றை முடிக்க முடியாமல், பள்ளிக்கல்வி துறை திணறி வருகிறது.

இதுகுறித்து, பள்ளி கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள், வழக்கு விசாரணை பிரிவு அலுவலர்கள் ஆகியோருடன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், தலைமை செயலகத்தில், நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, வழக்கு களை விரைந்து முடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செயலர் உத்தரவிட்டார். வழக்குகளால், நிர்வாக பணிகள் பாதிக்காமல், வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

3 comments:

  1. பகுதி நேர ஆசிரியரின் தலை எழுத்து மாறுமா?

    ReplyDelete
  2. School of education minister post waste.Lot ofcauses stagnation in trb with in 8years

    ReplyDelete
    Replies
    1. Sattam oru iruttarai.Neethikke neethi valangum nilai tamilagathil mattume.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி