அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2018

அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி 800 அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர்கழகத்தின் மூலம் உடனடியாக நியமிக்க வேண்டுமென கணினி ஆசிரியர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் குமரேசன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய பாடத்திட்டத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 3 வகையானகணினி பாடபுத்தகம் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்தஆண்டு முதல் கணினி தொடர்பான இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம்செய்யப்படுகின்றன. தமிழக பள்ளி கல்வியில், முதல் கட்டமாக, 1, 6, 9மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2படிக்கும்தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், ‘ஆர்ட்ஸ் குரூப்’மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இந்தஆண்டே இந்தப் புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வந்துள்ளது.அதாவது, கணித பிரிவு மாணவர்களுக்கு கணினி அறிவியல் என்ற பாடமும்,வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம் போன்ற ஆர்ட்ஸ்பாடப்பிரிவினருக்கு கணினி பயன்பாடுகள் பற்றிய கம்ப்யூட்டர்அப்ளிகேஷன்ஸ் என்ற பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்றுஅனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும் கணினி தொழில்நுட்பம் என்றபாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ்1வகுப்புக்கு நடைமுறைக்குவந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்2வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. பிளஸ்1க்கு கடந்த ஆண்டு முதல்பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இரண்டு மாதங்களுக்கு முன்பு கணினிஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு பிறகு தலா 800 அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காலியாகவேஉள்ளது. இதனால் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் கணினி பயிலும்மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

எனவே நிரந்தரஆசிரியர்கள் நியமிக்கும் வரை அரசு உடனடியாக பெற்றோர் ஆசிரியர்கள்கழகத்தின் வாயிலாக பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. Enna korikkai vachalum no refelect...????

    ReplyDelete
  2. Nirathara posting kekkama ithu e na tharkaliga posting...tharkalikma posting pottachuna niranthara paniyidam ippo poda mattanga..just think

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி