சிறப்பாசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2018

சிறப்பாசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்?


கல்வித்துறையில் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

பள்ளி கல்வியில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டம் (ஐ.இ.டி.,) 2009 -10ல் துவக்கப்பட்டது. இதில் 13,115 மாணவர் படிக்கின்றனர். இவர்களுக்காக 202 சிறப்பாசிரியர் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 சதவீதம் அடிப்படையில் சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படுகிறது. நிர்வாக சீரமைப்பிற்காக எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் (டயட்) ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.ஏ., (சமஹ சிக்ஷான் அபியான்) என மாற்றம் செய்யப்பட்டது. இதை காரணம் காட்டி ஓராண்டாக சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் 40 சதவீதம் பங்களிப்பு சம்பளம் நிறுத்தப்பட்டது. இதனால் 34,148 ரூபாய் என்ற சம்பளம் 25 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால் சிறப்பாசிரியர்கள் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுகலை சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலசெயலாளர் சரவணன் கூறியதாவது:ஓராண்டாக மாநில அரசின் பங்களிப்பு சம்பளம் முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர 2012 - 13ம் ஆண்டுமுழுவதும் சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் 2013 - 2014 மற்றும் 2014 -2015ம் ஆண்டுகளில் 10 மாதம் என 22 மாதங்கள் சம்பளம் 'அரியர்ஸ்' வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.

கல்வி செயலாளர், இயக்குனரிடம் புகார் அளித்தும்நடவடிக்கை இல்லை. இதனால் அதிருப்தியடைந்த பலர் வேலையை விட்டு சென்றனர். இதில் ஏற்பட்ட காலியிடங்களில் 59 பேர் டி.ஆர்.பி., மூலம் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 41 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பணியில் உள்ள பிற ஆசிரியர்களுக்கும் இதுபோல் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி