மாணவர்களுக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2018

மாணவர்களுக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட்!



கொல்கத்தாவில் பள்ளி மாணவர்களுக்கு இலவச குடை வழங்கஅம்மாநகராட்சி அறிவித்துள்ளது.

அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநில அரசுகள் அவர்களுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றன. மாணவர்களுக்குச் சத்துணவு, புத்தகம், பை, சீருடைகள், ஷூக்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாநகராட்சி மாணவர்களுக்கு இலவச குடை மற்றும் ரெயின்கோட் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளது.கோடைக்கால வெயிலில் இருந்து மாணவர்கள் தப்பிக்கவும், மழைக்காலத்தில் மாணவர்களின் வருகை குறைவைத் தடுக்கும் வகையிலும், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. நாளைக்கு இங்கயும் குடுப்பாங்க, மழை வர போகுதுல, எல்லாமே ஓசில குடுத்துட்டா புள்ளைய பெத்தவன் என்னா கூந்தலா கழட்டிட்டு இருக்கானு தெரில,

    ReplyDelete
  2. அடுத்த ஊழலுக்கான திட்டம். ஆசிரியர் பாடு அரோகரா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி