ஆசிரியர் தின கவிதை - அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2018

ஆசிரியர் தின கவிதை - அனைத்து ஆசிரியர்களுக்கும் சமர்ப்பணம்!

அறிவுத் தூண்டுகோல்களுக்கு....
அகரம் சொல்லித் தந்த சிகரங்களே உங்களுக்கான வாழ்த்துப்பாவினையும் அதிலிருந்தே தொடங்குகிறேன்

அறிவின் துளிகளை அள்ளிவந்து வகுப்பறையெங்கும் புதுமை செய்கிற அற்புத வித்தகர்கள் நீங்கள்

கை பிடித்து
சொல்லித் தந்து தான் 
கைதூக்கி விடுகிறீர்கள்
களிமண்ணையும் வண்ணங்கள் குழைத்து பெருஞ்சிற்பமாக்கும் அருஞ்சிற்பிகள் நீங்கள்..

படி படி என பாடஞ்சொல்லும் நீங்கள் தெய்வத்தினும் 
ஒரு படி மேல் தான்

நீங்கள்
அறியாமை இருளகற்றும் அறிவுச்சூரியன்கள்
உங்கள் பலகை பாடம் தான் பல கைகளை உயர்த்தியது

இருட்டுக்கே வெள்ளையடிக்கிற உங்கள் நல்லமனசு தான் 
கடைசிபெஞ்சு மாணவனின் உள்ளத்தையும் கொள்ளையடித்தது

விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும் சரிசமமாய் ஏற்கிற சாதகப் பறவைகள் நீங்கள்

கறை பூசுதல் எளிது
ஏசுதல் எளிது பரிகசித்தல் எளிது
இவையாவும் கடந்து நீங்கள் பாலநெஞ்சங்களிடம் காட்டும் அக்கறை தான் அளவிடற்கு அரிது

தேசம் சந்திக்கிற ஒவ்வொரு கசப்பான சம்பவங்களிலும் இறுதியாய் உதிர்க்கிற ஒற்றைக்கருத்து
ஆசான்களின் கைகள் கட்டப்பட்டதே இக்கொடூரங்களுக்குக் காரணம் என்பதாய் இருக்கும்...


எது எப்படி இருப்பினும் 
எண்ணமெலாம் மாணவர் நலனிலேயே நிமிடங்களை நகர்த்துகிற நல்லாசான்களே

இப்பெருவுலகில் ஏதோ ஒரு குழந்தையின் மனதில் நிச்சயம் எழுதப்பட்டுருக்கும் உங்களுக்கான நல்லாசிரியர்
என்ற உயர்விருது

அந்த அங்கீகாரத்தை மனதில் வைத்தே இன்னுஞ் சிறப்பாய் பணிசெய்யுங்கள்
மாற்றத்தின் மகாத்மாக்களே

இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்


சீனி.தனஞ்செழியன்,

முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.

10 comments:

  1. அறிவுச் சுடர் தந்து அறம் தழைக்க
    அச்சாணியாய் விளங்கும் ஆசான்களே -உங்கள்
    அடிமலர் பணிகிறேன்

    ஆசிரியர் பனி செய்ய காத்திருக்கும்
    எம் தொப்புள்கொடி உறவுகளே...
    உன் என்னம் நனவாக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. திரு.நந்தகுமார் Vocational Instructor General Machinist @ பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.- உங்கள் மாணவன் 1995-97.

    ReplyDelete
  3. Wish you happy teachers day to all off the teachers

    ReplyDelete
  4. Samugathin ariuchsudarai olirum en aciriyar perumakkalukku en manamarntha aciriyar thina vaalthukkal

    ReplyDelete
  5. 2012 and 2013 tet omr sheet marupadyum scan pana vendum endru naliku 2017 tet gr sarbaga korikai vaika padum

    ReplyDelete
    Replies
    1. Kandippaga 2012 &2013 tet omr sheet m scan panna veandum

      Delete
  6. படித்து பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும்,
    பெயரளவில் ஆசிரியர்களின் பணியைசெய்துகொண்டு முழுமையான ஆசிரியர் என்ற பட்டத்தை அங்கிகாரமாக மாற்றமுடியாமல் அணுதினம்
    "என்றாவது ஒரு நாள் ஆசிரியர் என்ற பட்டத்தை அங்கிகாரமாகிவிடுவோம்" என்ற வெற்று நம்பிக்கையுடன் காலம் தள்ளும்,
    50,000த்திற்கு மேற்பட்ட கணினி ஆசிரியர்களுக்கும்,
    Tet,trb போன்ற ஏமாற்றுபரிச்சைகளை விடாது நாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதைத் தொரிந்தே திரும்ப திரும்ப முயற்சிகள் செய்யும்,
    பெயரளவில் மட்டும் ஆசிரியர் என்ற பட்டத்தை வைத்துள்ள
    அனைத்து ஆசிரியர்களும்,
    மேலும்,
    கண்முன் கல்வியில் நடந்துகொண்டிருக்கும்அநியாயங்களைப் பார்த்தும்,பார்க்காமலும்,தெரிந்தும்,தெரியாதது போல் கண்
    மூடி, வாய்மூடி,கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்க்கொண்டே தனக்கு என்ற நிம்மதியான ஒரு வேலை,மாதம் பிறந்தால் டான் என்று ஒன்றாந்தேதி சம்பளம் கிடைத்தால் போதும் என்று,
    ஆசிரியர் பணியே,
    அறப்பணி அதை( அனைவருக்கும்)தனக்கும்,தன் குடும்பத்திற்கும் அர்பணித்துக் கொண்டு,
    சீரிய ஆசிரியர் பணியை மேற்கொண்டிருக்கின்ற தற்போதைய பணியில் உள்ள அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கும்,
    "இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்"..........

    ReplyDelete
    Replies
    1. Ithai Vida yaaralum sollaal adikka mudiyathu valthukkal thoola

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி