பெட்ரோல்,டீசல் விலை புதிய உச்சம் பெற்று வரலாற்று சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

பெட்ரோல்,டீசல் விலை புதிய உச்சம் பெற்று வரலாற்று சாதனை



பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது. சென்னையில் பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு 51 காசுகள் அதிகரித்து ரூ.83.13-ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ரூ.76.17ஆகவும் விற்பனையானது.
 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், எரிபொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 இந்நிலையில், பெட்ரோல், டீசலின் விலை வெள்ளிக்கிழமையன்று முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் அதிகரித்து ரூ.83.13-ஆகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ரூ.76.17-ஆகவும் விற்பனையானது.

 தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.99-ஆகவும், டீசல் விலை ரூ.72.07ஆகவும் அதிகரித்துள்ளது. மும்பையில் பெட்ரோல், டீசல் விலை முறையே ரூ.87.39; ரூ.76.51 என உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரை பெட்ரோலுக்கு ரூ.2.85-ம், டீசலுக்கு ரூ.3.3-ம் விலை அதிகரித்துள்ளது.

 எரிபொருள்களின் விலையை குறைக்கும் வகையில் கலால் வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வருவாய் இழப்பை குறிப்பிட்டு, கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

 இதனிடையே, பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து அடுத்த வாரம் பல்வேறு போராட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 எரிபொருள்களின் விலையில் பாதி அளவு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் உள்ளன. ஒரு லிட்டர் பெட்ரோல் மீது கலால் வரியாக மத்திய அரசு ரூ.19.48 விதிக்கிறது. இந்த வரி டீசல் மீது ரூ.15.33 ஆக உள்ளது. இது தவிர மாநில அரசுகள் மதிப்புக் கூட்டு வரியை (வாட்) விதிக்கின்றன.

 கடந்த 2014 இறுதியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தது. அப்போது முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 9 தவணைகளாக பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.11.77-ம், டீசல் மீதான கலால் வரியை ரூ.13.47-ம் மத்திய அரசு அதிகரித்தது.

2 comments:

  1. நன்றி மோடி ஜி

    ReplyDelete
  2. காங்கிரஸ் எதுக்கு போராடுறான், அவனுக்கும் ஏற்கனவே இதுல பங்கு இருக்கு,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி