ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2018

ஆசிரியர் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க குழு அமைப்பு


உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உதவி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, முறைகேடு குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் விசாரணைக் குழுவை அந்த மாநில அரசு அமைத்துள்ளது.

 முன்னதாக, 68,500 உதவி ஆசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் வெறும் 41, 556 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.
 இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
 உதவி ஆசியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடைய தேவையான தகுதி மதிப்பெண் பெறாத 23 பேர் தேர்ச்சியடைந்ததாக தேர்வு முடிவில் இருந்தது. அதையடுத்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், விடைத்தாள் திருத்தும் பணியிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

 தேர்வில் முறைகேடு நடந்தது தெரிய வந்ததும், அதுகுறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் குழு அமைத்து 7 நாள்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சிங் உத்தரவிட்டார். மேலும், உடனடியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுட்டா சிங்கை பணி நீக்கம் செய்யவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த விசாரணைக் குழுவின் தலைவராக, சர்க்கரை மற்றும் கரும்பு வளர்ச்சி துறை தலைவர் சஞ்சய் ஆர். பூஷ்ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் கல்வித்(சர்வ சிக்ஷா அபியான்) திட்டத்தின் இயக்குநர் வேதபதி மிஸ்ரா மற்றும் கல்வித் துறை இயக்குநர் சர்வேந்திர விக்ரம் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

3 comments:

  1. பழைய குழு என்னாச்சு

    ReplyDelete
  2. Epud waitage cancel pana kuzhu amaikranu sonigale, antha mathiriya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி