நிபந்தனை அடிப்படையிலேய நீட் பயிற்சி பெறுவோம்: ஆசிரியர்கள் பிடிவாதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2018

நிபந்தனை அடிப்படையிலேய நீட் பயிற்சி பெறுவோம்: ஆசிரியர்கள் பிடிவாதம்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கதேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் நிபந்தனை அடிப்படையிலேயே தாங்கள் பயிற்சி பெற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என்று கூறி உள்ளனர்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் 412 மையங்கள் செயல்பட உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு 12 ஆசிரியர்கள் வீதம் மொத்தம் 4800 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.

அவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மொத்தம் 36 வாரம், விடுமுறை நாள்களில் நடைபெறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதைய்டுத்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், விடுமுறை நாள்களில் ஆசிரியர்களைப் பயிற்சி வழங்கச் சொன்னால், அவர்களுக்கு ஓய்வு கிடைக்காத சூழல் ஏற்படும்.

தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு சொல்லித் தரவே தனியாக நாங்கள் தயாராக வேண்டி யுள்ளது. இந்த நிலையில், விடுமுறையில் தொடர்ந்து பணிசெய்யும் நிலை ஏற்பட்டால், இரண்டையும் சரிவர செய்யமுடியாத சூழ்நிலை ஏற்படலாம். எங்களுக்கு அரசுப் பள்ளி குழந்தைகளின் நலன்தான் முக்கியம். ஆனால், இதற்கு மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்தலாம்என்று கூறி வருகின்றனர்.அதைத்தொடர்ந்து ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நிபந்தனை அடிப்படையில் 'நீட்' பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீட் பயிற்சியில் வகுப்பில் பங்கேற்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பள்ளிப் பணியில் இருந்து விடுவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே நீட் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளி வேலை நாட்களில் பயிற்சி நடத்த வேண்டும்என்றும், சனி பயிற்சி வகுப்பிற்கு சுழற்சி முறையில் பணி வழங்கி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை களின் அடிப்படையில் பங்கேற இருப்பதாக கூறப்படுகிறது.

6 comments:

  1. Low salary for government teachers. So they could not do this work. Put them in private schools for one week. Only one week

    ReplyDelete
    Replies
    1. Come and work in govt school ..Write exam and get ur chance ... Otherwise keep quite ....Here lot of teachers doing their job sincerely ...

      Delete
  2. Unga govt students KU neet class edukka nipanthanai podurenga ahmneet class KU thania incentive tarom na OK nu solirupengathana

    ReplyDelete
  3. Govt teachers sincerara work panunana. Y student level low ahm say reason

    ReplyDelete
  4. Unga govt students KU neet class edukka nipanthanai podurenga ahmneet class KU thania incentive tarom na OK nu solirupengathana

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி