ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக் கூறிய தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2018

ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக் கூறிய தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப..



ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தன்னார்வத்துடனும் அக்கறையுடனும் செயலாற்றி வரும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியினை கல்வியாளர் சங்கமம் மூலமாக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளரும் தொல்லியல் துறை ஆணையருமான த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்....

 ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தில் கூறியிருப்பதாவது:

 ஆசிரியர்களின் பேரிலக்கணமாம் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் இந்நன்னாளில் தங்களின் அன்பை விழைகிறேன்..

வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிக்காமல் ஒழுக்கம்,பண்பு,ஆண்மீகம்,பொதுஅறிவு,ஆற்றல் மேம்பாடு,திறமை வளர்த்தல் ,தன்னம்பிக்கை ,வாழ்வியல் என பன்முகத் திறன்களை பகுத்துக் கூறி சிறந்த குடிமகனாக்கும் உன்னதமானதோர் தெய்வீகப் பணியே ஆசிரியப் பணியாகும்.

மாணவ சமூகத்தின் மத்தியில் குறிக்கோள் ,இலட்சியம் ,எதிர்காலம் இவற்றை நன்கு பதிய வைத்து அவர்களின் சீரிய வழிகாட்டியே ஆசான்..ஒரு தேசத்தின் எதிர்காலத்தை தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுபவரே நீர்...

மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குபவரே ஆசிரியர்..

மனித சமுதாயச் சிற்பிகளே,தங்களை இந்த நல்லதோர் தருணத்தில் நினைவு கூர்ந்து வணங்கி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Atha sollu nee yaru man. First un dutya paaru. Unakku yen yeriuthu? Oru unmayana nermayana athigariya thooki vera departmentku adichirukanga. Thirumba Education departmentku varave matarunu ninaikiriya? Nee Govtku Allakaiya? Nee IAS aga mata. Cooling glass potukitu kurai solla vanthutta. Un moonchikki colling glass oru keda? Un velaya nee mothalla paruda

      Delete
    2. ____ adichamathiri sonninka nanpa.

      Delete
    3. ____ adichamathiri sonninka nanpa.

      Delete
  2. நல்ல ஆசிரியரிடம் கல்வி பெற்ற, நல்ல குடும்பத்தை சார்ந்த, நல்ல மனம் படைத்த, எதிர்கால சிந்தனை உடைய சமுதாய சிற்பி நீங்கள் எங்கிருந்தாலும் சாதனையும்,சரித்தரமும் படைப்பீர்கள்.

    ReplyDelete
  3. thank u very much sir..we r expecting to return again to the education department sir..

    ReplyDelete
  4. Thanks sir. Real salute for your

    ReplyDelete
  5. நன்றி...
    நல்லவை நடந்திட நாளும் முயற்சிப்போம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி