ஐஐடி நுழைவுத்தேர்வு தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2018

ஐஐடி நுழைவுத்தேர்வு தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்


குஜராத்தி போல தமிழிலும் ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.

சென்னை புரசைவாக்கம் சிஎஸ்ஐ ஈவார்ட் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு இதுவரை இந்தி, ஆங்கிலத்தில்மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு குஜராத்தி மொழியிலும் தேர்வு எழுதலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் தமிழ்வழியிலும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் விருப்பம். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

‘டெட்’ ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அது ஒரு தகுதித் தேர்வுதானே தவிர,ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வு அல்ல என்பதை தேர்வர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பணி நியமனத்துக்கு தனியாக போட்டித் தேர்வு நடத்தப்படும்.  தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நிய மனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளனர்.அந்த வழக்கை முறையாக எதிர்கொண்ட பின்னர், ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

பள்ளிகளில் ஆசிரியர் பணியில் காலியிடம் இருந்தால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ரூ.7,500 தொகுப்பூதியத்தில் அங்கு பணியமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி