உ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2018

உ.பி., பியூன் வேலைக்கு பிஎச்டி பட்டதாரிகள் போட்டி!!!

லக்னோ:உ.பி.,மாநில காவல்துறையில் 62 பியூன் காலி இடத்திற்கு 81 ஆயிரம் பட்டதாரிகள் போட்டியிட்டுள்ளனர்.

உ.பி., மாநில காவல் துறையில் அலுவலக உதவியாளர் (பியூன்) காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் செய்யப்பட்டது. காலி பணியிடங்களுக்கான சம்பளம் ரூ. 20 ஆயிரம் எனவும், குறைந்த பட்ச கல்வித்தகுதி 5-ம் வகுப்பு எனவும் விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.இதனையடுத்து காவல் துறைக்கு 81 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தது. இதில் பட்டதாரிகள் 50 ஆயிரம் பேர், முதுகலை பட்டதாரிகள் 28 ஆயிரம் பேரும், பிஎச்டி படித்தவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் என 81 ஆயிரத்து 700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பியூன் வேலைக்கு குறைந்த பட்ச தகுதி 5-ம் வகுப்பு என்று இருந்தபோதிலும் எதிர்பாராத வகையில் பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பதால் தற்காலிகமாக தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி