தேர்வு அறைக்கு செல்லும் முன் தாலியை கழட்ட சொன்ன அதிகாரி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2018

தேர்வு அறைக்கு செல்லும் முன் தாலியை கழட்ட சொன்ன அதிகாரி



திருமணமான பெண்கள் தேர்வு எழுத தேர்வறைக்குக் செல்லும் முன் தாலியைகழட்ட சொன்ன அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வு நடைபெற்றது. அப்போது தாலியை கழட்டிவிட்டுத்தான் தேர்வு அறைக்கு செல்ல வேண்டும் என தேர்வு அதிகாரி வற்புறுத்தியதால் வேறு வழியின்றி தேர்வு எழுத வந்த பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை கழற்றி கணவர்களிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுதாலி இந்து பெண்களின் பாரம்பரியம் என்றும், தாலியை கழட்டினால் கணவருக்கு ஆபத்து என செண்டிமெண்ட்டாக ஒருசில பெண்கள் தேர்வு அதிகாரியிடம் கெஞ்சியும் தேர்வு அதிகாரி கறாராக இருந்த கண்ணீருடன் ஒருசில பெண்கள் தாலியை கழட்டி விட்டு பின் தேர்வு எழுதினர்.

தேர்வு எழுதும் பெண்களில் ஒருசிலர் தங்களின் தாலியில் ஒருசில எலெக்ட்ரானிக் டிவைஸ் வைத்து அதன்மூலம் முறைகேடாக தேர்வு எழுதுவதாக வந்த புகார்களை அடுத்தே தேர்வு அதிகாரி இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து தேர்வுத்துறைஇயக்குநர் கூறும்போது, தேர்வு எழுத வரும் பெண்கள் தாலியைக் கழற்ற வேண்டும் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் விதிமுறைகளை தவறாகப் புரிந்துக்கொண்ட தேர்வு மைய அதிகாரிகள், இதுபோன்று செயல்பட்டு இருக்கலாம்.

 இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறினார்திருமணமான பெண்கள் தேர்வு எழுத தேர்வறைக்குக் செல்லும் முன் தாலியைகழட்ட சொன்ன அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி