உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான தடையை நீக்கியது தவறில்லை ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2018

உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான தடையை நீக்கியது தவறில்லை ஐகோர்ட்டு உத்தரவு


உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது தவறு இல்லை என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

உதவி பேராசிரியர் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்குதமிழ் துறையில் 13 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த பணியிடங்களை நிரப்பும் நடைமுறைகள், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறி முத்துகுமார் என்பவர் 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உதவி பேராசிரியர் பணியிடத்தில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த இடத்தை நிரப்ப தடை விதித்தும்இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த இடைக்கால தடையை நீக்கக்கோரி பல்கலைக்கழகம் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தடை நீக்கம் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, உதவி பேராசிரியர் பணியிடத்தை காலவரம்பின்றி நிரப்பாமல் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனக்கூறி கடந்த ஜூலை மாதம் தடையை நீக்கியது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் முத்துகுமார் மேல்முறையீடு செய்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர், ‘மாணவர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் உதவி பேராசிரியர் இடத்தை நீண்டகாலத்திற்கு காலியாக வைத்திருக்க முடியாது என்று கருதி தனி நீதிபதி அந்த தடையை நீக்கியுள்ளார். இதில் எந்த சட்டவிரோதமோ, தவறோ இல்லை. இதனால் மனுதாரருக்கு பாதிப்பும் இல்லை. இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி